கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரங்களை... பாஸ்போர்ட் உடன் இணைப்பது எப்படி?.. முழுமையான தகவல் உள்ளே

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Jun 26, 2021 01:02 PM

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் அதற்கான சான்றிதழில் தங்களது பாஸ்போர்ட் குறித்த விபரங்களை இணைப்பது குறித்த விபரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

how to link passport number with vaccination certificate

வெளிநாடுகளுக்கு பயணம் செய்வோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், வேலைவாய்ப்பு, படிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்வோர் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர்.

முதலில், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் selfregistration.cowin.gov.in என்ற இணையதளத்தில், தடுப்பூசி செலுத்திய போது அளித்த செல்போன் எண்ணை பதிவிட்டு, செல்போனுக்கு வரும் ஓடிபி (OTP) எண்ணை பதிவிட வேண்டும்.

உள்ளே நுழைந்த பிறகு, வலது பக்கம் உள்ள Raise an issue என்பதை தேர்வு செய்து, அதில் Add Passport Details என்ற லிங்கை க்ளிக் செய்ய வேண்டும். பின்னர், யாருடைய பாஸ்போர்ட் விவரங்களை இணைக்க வேண்டுமோ அவரது பெயரை பதிவிட வேண்டும்.

அதைத் தொடர்ந்து பாஸ்போர்ட் விவரங்களை சரியாக பதிவிட்டு, சுய ஒப்பம் அளித்த பிறகு அதனை சமர்பிக்க வேண்டும். அதன்பின்னர் முகப்பு பக்கத்திற்கு சென்று, டிராக் REQUEST-ஐ தேர்வு செய்து உங்களது பதிவின் நிலையை அறியலாம்.

மீண்டும் முகப்பு பக்கத்திற்கு வந்து பாஸ்போர்ட் விபரம் இணைக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. How to link passport number with vaccination certificate | India News.