எங்க உறவுல 'மூணாவது நாடு' வந்து தலையிடுற வேலை வச்சுக்காதீங்க.. சீனா காட்டம்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Jan 11, 2022 10:58 AM

இலங்கை: சீனாவே தங்களுடைய உண்மை நண்பன் என்றும் இனி ஆசியாவின் எழுச்சியையும் சீனாவே முன் நின்று வழிநடத்தும் என்பதுதான் எதார்த்தமான உண்மை என்று, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு விழாவில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார்.

china says no 3rd country interfere Sri Lanka-China relation

அதுமட்டுமல்லாமல் "சீனா எங்களது வரலாற்று ரீதியாக நட்பு நாடாகும். அந்த நீண்ட வரலாற்றில், சீனா எமக்குள்ள உண்மையான நண்பர் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்" எனவும் தனது உரையில் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார்.

china says no 3rd country interfere Sri Lanka-China relation

நினைவு நாணயம்:

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலும், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால ராஜதந்திர உறவை அங்கீகரிக்கும் பொருட்டும், ஒரு நினைவு நாணயத்தை தாம் வெளியிட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டியிருந்தார்.'

மூன்றாவது நாடு தலையிடக் கூடாது:

இந்த நிலையில், இலங்கை - சீனா இரு நாடுகளின் உறவில் எந்த மூன்றாவது நாடு தலையிடக்கூடாது என சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.

china says no 3rd country interfere Sri Lanka-China relation

இலங்கையில் இரண்டு நாள் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், இரு நாடுகளிடையிலான நட்பு இலங்கை- சீனா இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் உதவுவதாக அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷிவுடனான சந்திப்பின் போது கூறியுள்ளார். இலங்கை- சீன நட்புறவு பிற 3-ஆம் நாடுகளை குறிவைக்கவில்லை என்றும், இரு நாடு உறவுகளில் மூன்றாம் நாடு தலையிடக்கூடாது என்றும் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளை மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

சீன வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்து:

இலங்கை அம்பன்தோட்ட துறைமுகத்தை சீனா குத்தகைக்கு எடுத்தது, கொழும்பு துறைமுக நகர திட்டத்தை செயல்படுத்துவது போன்றவை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களாக பார்க்கப்படும் நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்து வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் எல்லை மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் சீனா ஆக்கிரமிப்பு செய்து ஊர்களின் பெயர்களை மாற்றியது சாட்டிலைட் புகைப்படங்களில் தெரிய வந்துள்ளது.

Tags : #CHINA #SRI LANKA #வாங் யீ #RELATION #WANG YI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. China says no 3rd country interfere Sri Lanka-China relation | World News.