நிவர் புயலால் ‘சென்னை’ மக்களுக்கு நடந்த ஒரு நல்ல விஷயம்.. அடுத்த வருசம் அந்த ‘பிரச்சனையே’ இருக்காது..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நிவர் புயலால் கொட்டிய கனமழையால் சென்னை மக்களுக்கு ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்று மாலை அதிதீவிர புயலாக வலுவடைந்தது. இதனை அடுத்து புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை புயல் கரையை கடந்தது. அப்போது புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் மணிக்கு 120 முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
அதேபோல் சென்னையிலும் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளமாக ஓடியது. கடந்த 36 மணிநேரத்தில் சென்னையில் 23 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். இதனால் சென்னையில் இருக்கும் ஏரிகள் எல்லாம் நிரம்பி உள்ளன.
இதில் சோழவரம், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் முழுவதும் நிரம்பி காணப்படுகின்றன. செம்பரம்பாக்கத்தில் உள்ள நீர் வெளியேற்றப்பட்ட பின்பும் கூட 22 கனஅடிக்கு தண்ணீர் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஏரிகள் எல்லாம் நிரம்பி உள்ளதால் அடுத்த ஒரு வருடம் முழுக்க சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இருக்காது என சொல்லப்படுகிறது. சென்னையின் குடிநீர் தேவையை 35 முதல் 40 சதவீதம் வரை பூர்த்தி செய்யும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியுள்ளதால் கோடையில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
