'பீஸ் கட்டுறேன்னு சொன்னேனே...' 'அதிகாலை கண் விழித்தபோது...' 'திருமணம் முடிந்து 10 மாசத்துல...' - மனைவி எடுத்த விபரீத முடிவு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகல்லூரி கட்டணம் செலுத்த காதல் கணவர் பணம் அளிக்காததால் 20 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாவட்டம் வீராம்பட்டினம் அப்துல் கலாம் நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் 20 வயதான தேவிகா. இவர் கிருமாம்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் லேப் டெக்னீசியன் படிப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் தேவிகா கடந்த 10 மாதங்களுக்கு முன் வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தற்போது இந்த கொரோனா ஊரடங்கில், கணவன் மனைவி இருவருக்கும் கல்லூரி படிப்பு தொடர்பாக அடிக்கடி சண்டை எழுந்துள்ளது.
இந்நிலையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் நேற்று இரவு அனைவரும் தூங்கி கொண்டிருக்கும் சமயத்தில் தேவிகா தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
தேவிகாவின் கணவர் பாலமுருகன் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது தேவிகா தூக்கில் தொங்குவதை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, அரியாங்குப்பம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தேவிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அரியாங்குப்பம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தேவிகா தனது கல்லூரி படிப்பிற்கு கட்டணம் செலுத்த தன் கணவரிடம் பணம் கேட்டுள்ளார். தற்போதைய ஊரடங்கு நீதி நெருக்கடியால் கணவர் பாலமுருகனால் பணம் கொடுக்க முடியவில்லை. சிறிது நாட்கள் பொறுக்குமாரும் கூறியுள்ளார். ஆனால் இதனை காரணம் காட்டி கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனமுடைந்த தேவிகா தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
திருமணமான 10 மாதங்களிலேயே தேவிகா எடுத்த இந்த விபரீத முடிவு அப்பகுதி மக்களையும், அவரின் குடும்பத்தாரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
