“மக்கள் செல்வா.. மாற்றய்யா?”.. “வாழவைத்த மக்களின் உணர்வைவிட இந்தப்படம் பெரிதல்ல சகோதரா!” .. விஜய் சேதுபதியை நோக்கி இயக்குநர்களின் கோரிக்கைகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Oct 15, 2020 12:32 PM

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘800’ எனும் திரைப்படத்தில் தமிழ் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு தமிழ் ஆதரவாளர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள், இணையவாசிகள் மத்தியில் இருந்து பல்வேறு எதிர்ப்புகள் உருவாகியுள்ளன.

cine people request vijay sethupathi Over Muthaiya Muralidharan biopic

இதுபற்றி 800 திரைப்பட தயாரிப்பு நிறுவனம் கூறும்பொழுது, ஈழத் தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக காட்சி அமைப்புகள் இல்லை என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. இதனிடையே கவிஞர் மற்றும் பாடலாசிரியர் தாமரை, விஜய் சேதுபதியின் ஆதர்ச இயக்குநர் சீனு ராமசாமி, இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் தங்கள் மாற்றுக்கருத்துக்களை பதிவு செய்து விஜய் சேதுபதிக்கு அப்படத்தில் நடிக்க வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுபற்றி பேசிய இயக்குநர் சீனுராமசாமி,  “மக்கள் செல்வா.. நீரே எங்கள்  தமிழ் சொத்து அய்யா நமக்கெதற்கு மாத்தையா? மாற்றய்யா?” என்று ட்வீட் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் இயக்குநர் சேரன், “உலகம் முழுவதுமிருந்து  தமிழர்களின் வேண்டுகோள் 800 வேண்டாம் என.. உங்களை வாழவைத்த மக்களைவிட, உணர்வை விட, தமிழ் ஈழ மக்களின் உயிர்போன கொடும் நிகழ்வை விட இந்தப்படம் பெரிதல்ல சகோதரா.. விட்டுவிடுங்கள். உங்களின் நடிப்புத்தீனிக்கு ஆயிரம் கதாபாத்திரங்கள் காத்திருக்கிறது.” என்று தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Cine people request vijay sethupathi Over Muthaiya Muralidharan biopic | India News.