‘விசுவின் மறைவு, தரமான குடும்பத் திரைப்பட பார்வையாளர்களுக்கு கண்டிப்பா..!’ - மு.க.ஸ்டாலின் உருக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 23, 2020 10:12 AM

நடிகர், கதாசிரியர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட இயக்குனர் விசு உடல்நலக் குறைவு காரணமாக மறைந்த செய்தி கேட்டு தான் மிகுந்த துயருற்றதாகவும் அவரது மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் திமுக தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

MKStalin Condolence to Director Visu Death விசு மறைவு ஸ்டாலின் இரங்கல்

இதுபற்றி தமது அறிக்கையில், மு.க.ஸ்டாலின், “திரைப்படம் மட்டுமின்றி மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர், தொலைக்காட்சி விவாதங்களை தொகுத்து வழங்குவது என திரைத்துறையின் ஒட்டுமொத்த திறமையைத் தன்னகத்தே கொண்ட விசு ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தில் நிலவும் பாசத்தை கருவாக வைத்து படமெடுத்து மக்கள் மனதில், குறிப்பாக தாய்மார்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற அவருடைய மறைவு திரைத்துறைக்கு இழப்பு.  தரமான குடும்பத் திரைப்படங்கள் பார்ப்பவர்களுக்கும் விசுவின் மறைவு ஒரு பெரிய இழப்பு. விசுவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : #MKSTALIN #VISU