“தவறு செய்தால்.. மனைவி காலில் விழுவது தவறில்லை".. புதுமண தம்பதிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த அட்வைஸ்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Mar 06, 2023 11:14 AM

கோவையில் 81 ஜோடிகளுக்கு சுயமரியாதை திருமணம் நடத்திவைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதுமண தம்பதிகளுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார்.

Minister Udhayanidhi Stalin Advises Newly Married Couples in Kovai

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | அன்பு மனைவியை ஃபோட்டோ எடுக்க கணவர் எடுத்த முயற்சி.. மனதை கொள்ளை கொண்ட வீடியோ!!  

உதயநிதி ஸ்டாலின்

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும் திமுகவின் இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றிருந்தார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து வருகிறார் அவர். இணையத்தில் எப்போதும் அமைச்சர் உதயநிதி பேசுபவை ட்ரெண்டாகும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அவர் பேசிய பல விஷயங்கள் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தன.

Minister Udhayanidhi Stalin Advises Newly Married Couples in Kovai

Images are subject to © copyright to their respective owners.

கோவை விசிட்

இந்த சூழ்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். மாற்றுத் திறனாளி இளைஞர்களின் கல்வி மற்றும் மருத்துவ செலவு உதவிகளை வழங்குதல், பொற்கிழி வாழங்கும் விழா மற்றும் பிரம்மாண்ட சுயமரியாதை திருமண விழா ஆகியவற்றில் அவர் கலந்துகொண்டார்.

Minister Udhayanidhi Stalin Advises Newly Married Couples in Kovai

Images are subject to © copyright to their respective owners.

சுயமரியாதை திருமணம்

இந்த சூழ்நிலையில் கோவையில் 81 ஜோடிகளுக்கு சுயமரியாதை திருமணம் நேற்று நடத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அப்போது சீர்வரிசை பொருட்களும் மணமக்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது, திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,"இங்கு நடைபெற்றிருப்பது சுயமரியாதை திருமணம். அந்த காலத்தில் இந்த மாதிரியான சுயமரியாதை திருமணத்தை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதற்கு அங்கீகாரம் கொடுக்க வலியுறுத்தியவர் தந்தை பெரியார். அதனை முன் மொழிந்தவர் அறிஞர் அண்ணா. அதனால் தான் தொடர்ந்து கலைஞரும், முதலமைச்சரும் சுயமரியாதை திருமணத்தை நடத்தி வருகின்றனர். " என்றார்.

Minister Udhayanidhi Stalin Advises Newly Married Couples in Kovai

Images are subject to © copyright to their respective owners.

தொடர்ந்து பேசிய அவர்,"யாரும் யாருக்கும் அடிமை இல்லை. அதனாலேயே இதை சுயமரியாதை திருமணம் என்கிறோம். திருமணத்திற்கு பிறகும் நமக்கான உரிமைகளை கேட்டுப்பெறவேண்டும். இங்கே சிலர் என் காலில் விழ முயற்சித்தபோது நான் தடுத்தேன். யார் காலிலும் விழாதீர்கள். தவறு செய்தால் மனைவி காலில் விழலாம். அது தவறு கிடையாது. எல்லா திருமண உறவிலும் சண்டைகள் வரத்தான் செய்யும். அதனை புரிந்துகொண்டு தங்களுக்குள் பேசி தீர்வை எட்டவேண்டும்" என்றார்.

Also Read | "மெஸ்ஸி தான் பெஸ்ட்"... கூச்சலிட்ட சிறுவன்.. ரொனால்டோ கொடுத்த பதில்.. வைரலாகும் வீடியோ..!

Tags : #UDHAYANIDHI STALIN #MINISTER UDHAYANIDHI STALIN #NEWLY MARRIED COUPLES #KOVAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Minister Udhayanidhi Stalin Advises Newly Married Couples in Kovai | Tamil Nadu News.