தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. முக்கிய தரவுகள்!.. ஓரிரு வரிகளில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Apr 24, 2020 06:41 PM

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

tn corona stats and updates media bulletin as on april 24

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மேலும், 2 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 22 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை  866 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 864 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் தற்போதுவரை 65,834 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.