ஒருவாரத்தில் திருமண நிச்சயதார்த்தம்.. மணப்பெண்ணுடன் வெளியே சென்ற புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அடுத்த வாரம் திருமணம் நிச்சயிக்கப்பட இருந்த நிலையில் இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் மரணமடைந்த சம்பவம் வால்பாறை மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் பாலா சுகேஷ். 23 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இவருக்கும் பொள்ளாச்சி ஜமீன் கோட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த யாஷிகா என்பவருக்கும் அடுத்த வாரம் திருமணம் நிச்சயிக்கப்பட இருந்திருக்கிறது. இது தொடர்பாக இரு வீட்டினரும் பேசி முடிவு செய்திருந்த நிலையில் இந்த துயர சம்பவம் நடந்திருப்பது மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தனக்கு நிச்சயிக்கப்பட இருக்கும் யாஷிகாவை அழைத்துக்கொண்டு பாலா சுகேஷ் காரில் வெளியே சென்றிருக்கிறார். ஆழியாரை சுற்றிப் பார்க்க இருவரும் தங்களது காரில் சென்றிருக்கின்றனர். அப்போது ஆழியாறில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த அரசு பேருந்து மீது கார் மோதியதாக சொல்லப்படுகிறது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.
விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்திருக்கின்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாலா சுகேஷ் மரணமடைந்ததாக தெரிகிறது. படுகாயமடைந்த யாஷிகா பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக தகவல் அறிந்த ஆழியார் காவல் துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர்.
அடுத்த வாரம் திருமணம் நிச்சயிக்கப்பட இருந்த நிலையில் மணப்பெண்ணுடன் காரில் சென்ற புது மாப்பிள்ளை சாலை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
