'நகைய என்கிட்ட கொடுத்துட்டீங்கல...' 'இனி கவலை படாம போங்க...' 'ஒரு பவுன் நகைக்கு ஒரு லட்சம்...' - நைட்டோடு நைட்டா ஆள் ஜூட்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்வதாக கூறி கிராமப் பெண்களிடம் 93 சவரன் நகைகளை சுருட்டிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

26 வயதான சபீனா என்ற பெண்மணி சேலம் அமானி கொண்டலாம்பட்டி, அரச மரத்துக்காட்டூரைச் சேர்ந்தவர். இவர் தான் வசிக்கும் சுற்றுவட்டார மக்களிடம் தான் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வருவதாக கூறி வந்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் தன்னுடன் வேலை செய்யும் உயர் அதிகாரி ஒருவர் தன்னிடம் உள்ள கருப்புப் பணத்தை வெள்ளை பணமாக மாற்ற 1 சவரன் தங்க நகைக்கு 1 லட்சம் வரை தர தயாராக உள்ளதாக அப்பகுதி பெண்களிடம் கூறியுள்ளார் சபீனா.
இதைக் கேட்ட அப்பகுதி பெண்களில் சிலர் கிடைத்தவரை லாபம் என நினைத்து சபீனாவிடம் தங்களின் நகைகளை கொடுத்துள்ளனர். மேலும் கவலைப்பட வேண்டாம், பணம் ஒரு மாதத்தில் வழங்கப்படும் என்றும், அதற்கு முன் நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் மூலம் முத்திரைத்தாளில் உத்தரவாதம் எழுதிக் கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் தனக்கு வந்த 96 சவரன் நகைகளை எல்லாம் சுருட்டிக்கொண்டு இரவோடு இரவாக பெட்டிபடுக்கைகளை எடுத்துக்கொண்டு ஓடியும் விட்டார்.
தற்போது நகைகளை பறிகொடுத்த பெண்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் உள்ளனர் l. விசாரணையில் காஞ்சனா என்பவரிடம் 16 பவுன், திலகவதி 30 பவுன், மஹாலட்சுமி 16 பவுன், சிவகுமார் 8 பவுன், விஜயா 16 பவுன், மைதிலி 3, சுதாகர் ஒன்றரை பவுன், பாரதி 3 பவுன் என மொத்தம் 93 பவுன் நகைகளை ஏமாந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
ஒரு சிலர் தாங்கள் அடகு வைத்திருந்த நகைகளையும் சபீனாவிடம் கடன் வாங்கிய பணத்தில் மீட்டு, அவற்றையும் கொடுத்துள்ளனர்

மற்ற செய்திகள்
