"வார்னே இருந்த ரூம்-ல நுழையும்போது தான் அதை கவனிச்சோம்"..போலீஸ் சொன்ன ஷாக் நியூஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று முன்தினம் உலக கிரிக்கெட் ரசிகர்களை ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது அந்த செய்தி. சுழலின் மன்னர் என்று அழைக்கப்படும் ஷேன் வார்னே மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியை நம்புவதற்கு கூட பலரும் தயாராக இருக்கவில்லை. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் தனது சுழலால் வசப்படுத்திய வீரரின் இறுதி நாள் மார்ச் 4 ஆம் தேதியாகத் தான் இருந்திருக்கிறது.
இவங்க 'பெண்கள் கிரிக்கெட்டின்' சச்சின்பா .. மிதாலி ராஜ் படைத்த ரெக்கார்டு பிரேக்கிங் சாதனை
தங்கியிருந்த விடுதி அறையில் மயங்கி கிடந்த வார்னே மாரடைப்பால் மரணம் அடைந்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். ஆனால், வார்னே-வின் அறைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் அங்கே, ரத்த கரைகள் இருந்ததாக சொல்லி இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
சுற்றுலா
52 வயதான ஷேன் வார்னே மற்றும் அவரது மூன்று நண்பர்கள் விடுமுறைக்காக தாய்லாந்து நாட்டின் கோ சாமுய் நகரில் உள்ள ஒரு தனியார் வில்லாவில் தங்கியிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரவு உணவிற்கு வார்னே வராததால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர் ஒருவர், வார்னே இருந்த அறைக்கு சென்று பார்த்திருக்கிறார். அங்கே மயங்கி கிடந்த வார்னேவை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து இருக்கிறார் அவர். இதனையடுத்து, பல மாரடைப்பால் வார்னே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு செய்தியாளர்களை சந்தித்த தாய்லாந்து காவல்துறை அதிகாரி யுதனா சிரிசோம்பாட் (Yuthana Sirisombat),"வார்னேவிற்கு ஏற்கனவே இதய பிரச்சினை மற்றும் ஆஸ்துமா இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 52 வயதான ஷேன் வார்னே, சமீபத்தில் அவரது இதய பிரச்சினை தொடர்பாக மருத்துவரிடம் சென்றுள்ளார். குடும்பத்தினர் அளித்த தகவல் மற்றும் சிசிடிவி ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது, அவரது மரணத்தில் எந்தவித சந்தேகமுல் இல்லை என்ற முடிவுக்கு காவல்துறை வந்துள்ளது" என்றார்.
ரத்தக் கறைகள்
இதனிடையே, ஷேன் வார்னே தங்கியிருந்த அறையில் ரத்த கறைகள் காணப்பட்டதாக சூரத் தானி மாகாண காவல்துறை தலைவர் மேஜர் ஜெனரல் சாடிட் போல்பினிட் (Satit Polpinit) தெரிவித்துள்ளார். வார்னேவிற்கு உயிர்காக்கும் சிகிச்சையான சிபிஆர் அளிக்கும்போது அவர் இருமியதால் ரத்தப்போக்கு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வார்னே தங்கி இருந்த அறையில் கார்பெட், 3 தலையணைகள் ஆகியவற்றில் வார்னேவின் ரத்தக் கரைகள் இருந்ததாக போல்பினிட் தெரிவித்திருக்கிறார்.
3 முறை
வார்னேவிற்கு அவரது நண்பர் ஒருவர் முதலில் சிபிஆர் செய்து இருக்கிறார். அதன்பிறகு ஒரு அவசரகால மருத்துவ குழு வந்து 10-20 நிமிடங்களுக்கு மற்றொரு சிபிஆர் செய்ததாகவும் பிறகு தாய் சர்வதேச மருத்துவமனையிலிருந்து ஒரு ஆம்புலன்ஸ் வந்து அவரை அங்கு அழைத்துச் சென்று அவருக்கு ஐந்து நிமிடங்கள் மீண்டும் சிபிஆர் செய்தார்கள் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"முதற்கட்ட ஆய்வில் வார்னே மரணத்தில் சந்தேகப்படும்படி ஏதுமில்லை" என தெரிவித்துள்ள அதிகாரிகள், முழுமையான உடற்கூறாய்வு அறிக்கை வெளிவந்த பின்னரே மரணத்திற்கான காரணங்கள் தெரியவரும் என்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள்.
மூனே நாளில் மேட்ச்சை முடித்த இந்தியா! பேட்டிங் பவுலிங் இரண்டிலும் கலக்கிய ஜட்டு!