44 ஆவது செஸ் ஒலிம்பியாட் : நிறைமாத கர்ப்பிணியாக களமிறங்கும் கிராண்ட் மாஸ்டர்.. கவனம் ஈர்த்த வீராங்கனை.. "யாருப்பா இந்த ஹரிகா??"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை மகாபலிபுரத்தில் வைத்து, 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், நாளை (28.07.2022) ஆரம்பமாக உள்ளது.
Also Read | "என்னது, எல்லா குழந்தைக்கும் இப்டி தான் பேரு வெச்சு இருக்காங்களா??.." வியப்பை ஏற்படுத்திய தம்பதி..
இதில், பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 2,000 வீரர் மற்றும் வீராங்கனைகள் வரை பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் 30 வீரர் மற்றும் வீராங்கனைகள் 6 பிரிவுகளாக களமிறங்க உள்ளார்கள்.
மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தமிழக அரசு சார்பில் நடைபெற்றிருந்தது.
இதில், ஆந்திராவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஹரிகா துரோணவள்ளி, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், சென்னையில் நாளை ஆரம்பமாகும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் களமிறங்க உள்ளார். சர்வதேச தரவரிசையில், தற்போது 11 வது இடத்தில் இருக்கும் ஹரிகா, நிச்சயம் சாம்பியன் ஆவார் என பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
உலக செஸ் அரங்கில், கடந்த 22 ஆண்டுகளாக ஹரிகா, நிறைய சாதனைகளை படைத்துள்ளார். ஆந்திர மாநிலம், குண்டூர் பகுதியைச் சேர்ந்த ஹரிகா, 6 வயது முதல் செஸ் போட்டிகள் விளையாடி வருகிறார். தன்னுடைய ஒன்பதாவது வயதில், 10 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி பதக்கம் வென்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தன்னுடைய 12-வது வயதில் ஆசியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரான இவர், மூன்று முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கல பதக்கம், தேசிய அளவிலான 16 பட்டங்கள் உட்பட 45 க்கும் அதிகமான பட்டங்களை பெற்றுள்ளார்.
மேலும், நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இரண்டாவது பெண் என்ற சாதனையும் ஹரிகா படைத்துள்ளார். அவருக்குப் பிறகு எந்த ஒரு பெண்ணும் இந்தியாவில் இருந்து இதுவரை கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹரிகாவை பாராட்டி, கடந்த 2008 ஆம் ஆண்டு மத்திய அரசு அர்ஜுனா விருதும், 2019 ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் வழங்கி கௌரவித்திருந்தது.
இப்படி செஸ் போட்டிக்கு புகழ் பெற்ற கிராண்ட் மாஸ்டர் ஹரிகா, 8 மாத கர்ப்பிணியாக நாளை ஆரம்பமாக உள்ள செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.
முன்னதாக, சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு ஹரிகா அளித்திருந்த பேட்டியில், ஒலிம்பியாட்டிற்கு தயாராவது சிறப்பான விஷயம் என்றும், என்னுடைய உடல் நிலையையும் ஒலிம்பியாட்டிற்கு தயாராவதையும் சமநிலையில் வைத்திருக்கிறேன் என்றும் எனக்கு ஆதரவாக இருக்கும் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ஹரிகா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | 'Try' பண்ணி பாப்போமே.." 50,000 ஊழியர்களுக்காக.. CEO எடுத்த அதிரடி முடிவு.. பாராட்டும் நெட்டிசன்கள்