ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம் “செஸ் ஒலிம்பியாட் தம்பி வேட்டிகள்”
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம் “செஸ் ஒலிம்பியாட் தம்பி வேட்டிகள்”
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் KR.நாகராஜன், தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள செஸ் ஒலிம்பியாட் தம்பி வேட்டிகளை, விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் புடைசூழ, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார். இது பற்றிய விபரம் பின் வருமாறு.
தம்பி வேட்டியை நடிகர் பத்மஸ்ரீ ஜெயராம் வெளியிட உள்ளார். சிறப்பான பாரம்பரியம், கலாசாரம், கலைகள் உள்ளிட்ட தென்னிந்தியாவின் கலாசார தலைமையகமாகச் சென்னை திகழ்கிறது. சென்னை இந்திய செஸ் விளையாட்டின் புனிதத் தலம். இது வரலாறுகள் படைக்கப்பட்ட இடம். உலகின் மாபெரும் சர்வதேச செஸ் விளையாட்டுத் தொடர் போட்டிகள் ஜூலை 28லிருந்து ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரம் அருகில் பூஞ்சேரி என்ற இடத்தில் நடைபெற உள்ளது. சென்னையிலிருந்து 50 கிமீ தூரத்தில் இருக்கும் இந்த ஊர் யுனெஸ்கோவினால் பாரம்பரியம் மிக்க இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு முதன்முறையாக இந்தியாவை இப்போட்டிகள் நடத்துவதற்கு தேர்ந்தெடுத்தது. சென்னை இதில் உலக சாதனை படைத்திருக்கிறது. 187 நாடுகளிலிருந்து 2000 போட்டியாளர்கள் கலந்து கொள்வது என்பது இந்தத் தொடர் போட்டிகள் சரித்திரத்தில் பெரும் நிகழ்வாகக் கருதப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முக்கிய நிகழ்வுக்கு முன்பாக நடந்தப்பட்ட குறு நிகழ்வில் 1414 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு “மாபெரும் துவக்க விழா”என்ற உலக சாதனையைப் படைத்திருக்கிறார்கள்.
“தம்பி” என்ற பெருமிதம் மிக்க அடையாள உருவமானது, நெஞ்சு நிமிர்த்தி, கைகளை மடக்கிக் கட்டிக்கொண்டு, வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சிறந்த தேர்வான “தம்பி” ஏற்கனவே பல வீடுகளில் பரசித்தி பெற்ற பெயர் ஆகும். உயர்தரமான பருத்தியில் நெய்யப்பட்ட வேட்டியும் சட்டையும் இந்திய கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் அடையாளப்படுத்துகிறது. எங்கள் ராம்ராஜ் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் வேரூன்றி இருந்தாலும் நவீன போக்கிற்கு ஏற்ப புதுப் புது ஃபாஷனில் வேட்டிகளை சந்தைப்படுத்துகிறோம்.
இன்று எல்லா வயதினருக்கும் வேட்டி என்ற விஷயத்தில் இந்திய நாகரீக ஆடைகள் துறையில் ராம்ராஜ் புத்தாக்க கண்டுபிடிப்பாளர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. அடக்கமான வேட்டிகள் என்ற இடத்திலிருந்து ராம்ராஜ் இதை மேன்மையான இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.
குறைந்த காலமே விற்பனைக்குக் கிடைக்கும் அரிய வேட்டியாக “தம்பி வேட்டி” யை அறிமுகம் செய்வதில் ராம்ராஜ் பெருமை கொள்கிறது. இது செஸ் விளையாட்டிற்கும் “தம்பி” என்ற அடையாள உருவத்திற்கும் ராம்ராஜ் செய்யும் கௌரவம். பிரீமியம் வேட்டியான இது, இந்தியாவில் தோன்றிய செஸ் விளையாட்டின் பெருமையையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் விதமாக கட்டம் போட்ட பார்டரில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை அணிபவர்களின் தோற்றத்தையும் அழகையும் எடுத்துக்காட்டும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
புத்தம் புதிய “தம்பி வேட்டிகள்” வழக்கமான கலர் மற்றும் பாணியில் இல்லாமல் அற்புதமான கருப்பு வெள்ளை கட்டம் போட்ட பார்டரில் தயாரிக்கப்பட்டுள்ளது. சொகுசாகவும் அழகாகவும் ஸ்டைலாகவும் வடிவம் பெற்றிருக்கிறது. பாரம்பரிய வேர்களை சார்ந்த உணர்விலிருகும் எவரும் இதை தவற விடமாட்டார்கள். ஆகவே.....
“தம்பி வேட்டியைக் கட்டிக்கோ! செஸ் போட்டியில ஜெயிச்சுக்கோ!!” என்கிற வரிகள் வைரலாகி வருகின்றன.