பூட்டிக் கிடந்த வீடு.. "கதவ ஒடச்சிட்டு உள்ள போய் பாத்ததுல.." நடுங்கிய கிராமம்.. "உள்ள இதோட 'SMELL' வேற வந்துருக்கு.."
முகப்பு > செய்திகள் > தமிழகம்பூட்டிக் கிடந்த வீட்டிற்குள் இருந்து, புகை வந்துள்ள நிலையில், ஊர் மக்களுக்கும் போலீசாருக்கும் கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த செங்கல்பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரை கண்ணன்.
இவர் கிராமிய நாடகத்தில் கலைஞராக இருந்து வருகிறார். இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, தனது இரண்டாவது மனைவி கமலா மற்றும் மூன்றாவது மனைவி சத்யா ஆகியோருடனும் செந்தாமரை கண்ணன் வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இரண்டாவது மனைவி கமலா மற்றும் அவரது மகன் குரு இரவு நேரத்தில் வீட்டில் இருந்த போது, அங்கே இருந்து புகை வந்ததாக கூறப்படுகிறது. வீடும் வெளியே பூட்டிய படி இருந்ததால், அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கே செந்தாமரையின் இரண்டாவது மனைவி கமலா மற்றும் அவரது மகன் குரு ஆகியோர், உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்துள்ளனர். அதே போல, வீட்டிற்குள் இருந்து பெட்ரோல் வாசனையும் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இருவரின் உடல்களையும் மீட்டு, போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இது தொடர்பாக போலீசார் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, தூங்கிக் கொண்டிருந்த கமலா மற்றும் குரு ஆகியோரை வீட்டிற்குள் வைத்து வெளியே கதவை பூட்டி வைத்து விட்டு, பின்னர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொழுத்தி இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகம் கொள்கின்றனர்.
இதனிடையே, கடந்த சில நாட்களாகவே, கமலா மற்றும் சத்யா ஆகியோருக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதுவும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே போல, கொலை நடந்த இரவில், செந்தாமரை வீட்டில் இல்லாமல் போனதும் போலீசாருக்கு அதிக சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இரவு நேரத்தில், வீட்டை பூட்டி வைத்து விட்டு கொலை நிகழ்ந்த சம்பவம், அந்த கிராமத்தையே அதிர வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
