‘உங்களின் இந்த முடிவு தமிழர்களின்’... ‘நடிகர் ரஜினியின் அறிக்கை குறித்து’... ‘குஷ்பு உருக்கமான ட்வீட்’...!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 29, 2020 06:47 PM

நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரமுடியவில்லை என்று அறிக்கை விட்டதையடுத்து, நடிகையும், பாஜகவின் தமிழக தலைவர்களில் ஒருவருமான குஷ்பு ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

Khushboo tweet about Rajinikanth cancels political plans

தனது உடல்நிலையை காரணம் காட்டி தற்போது ’கட்சி தொடங்கவில்லை. அரசியலுக்கு வரமுடியவில்லை. என்னை மன்னியுங்கள்’ என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து அறிக்கை விட்டுள்ளார்.  அவரின் இந்த முடிவுக்கு அரசியல்வாதிகளும், சினிமா பிரபலங்கள் என பல தரப்பினரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில், நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், ‘அன்புள்ள ரஜினிகாந்த் சார், உங்களுடைய முடிவு அனைத்து தமிழர்களின் இதயங்களையும் சுக்குநூறாக்கி விட்டது. ஆனால் உங்களுடைய ஆரோக்யம் மற்றும் உடல்நலத்திற்கு முன்பு வேறெதுவும் பெரிதல்ல என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உங்களுடைய நலம் விரும்பியாக, ஒரு தோழியாக உங்களுடைய முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். நீங்கள் எனக்கு விஷேசமான, மிக முக்கியமான ஒருவர். நன்றாக ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று கூறியுள்ளார்.

முன்னதாக ‘ஜனவரியில் கட்சி தொடக்கம்; டிசம்பர் 31-ல் கட்சி தேதி அறிவிப்பு’ என்று ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அறிவித்தபோது ‘அன்புள்ள ரஜினி சார், ஒரு வழியாக நீங்கள் அரசியலில் இறங்குகிறீர்கள் என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி. உங்கள் புதிய பாத்திரத்துக்கு வாழ்த்துக்கள். உங்கள் முழு முயற்சியை இதில் காட்டுவீர்கள் என்று எனக்கு உறுதியாகத் தெரியும்’ என்று உற்சாகமுடன் வாழ்த்து தெரிவித்திருந்தார் குஷ்பு.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Khushboo tweet about Rajinikanth cancels political plans | Tamil Nadu News.