ஸ்கூட்டி'ய ஓட்டிட்டு வரப்போ.. திடீர்ன்னு வண்டி முன்னாடி பெண் பார்த்த விஷயம்.. "அடுத்த செகண்டே அலறி ஓட ஆரம்பிச்சுட்டாங்க"
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெண் ஒருவர் ஸ்கூட்டியை ஓட்டிக் கொண்டிருந்த போது பார்த்த சம்பவமும், அதன் பின்னர் அரங்கேறிய நிகழ்வும் கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.

Also Read | 30 நாளுல 36 லட்சம்.. "கல்யாணம் பண்ண போறவரு தானேன்னு" நம்புன பெண்.. கதி கலங்க வெச்ச 'Voice' மெசேஜ்!!
கரூர் மாவட்டம், பவித்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சரண்யா. இவர் தனது தாய் மற்றும் குழந்தை ஆகியோரை ஸ்கூட்டியில் அமர வைத்து, கரூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
கரூர் ரவுண்டானா பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, சரண்யா எதிர்பாராத ஒரு அசம்பாவித சம்பவம் அங்கே அரங்கேறி உள்ளது.
சரண்யா ஓட்டிக் கொண்டு சென்ற ஸ்கூட்டியின் முன் பக்கத்தில் இருந்து திடீரென பாம்பு ஒன்று வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. வண்டி ஓட்டிக் கொண்டிருந்த சரண்யா, பாம்பை கண்டதும் அப்படியே ஒரு நிமிடம் பதறிப் போனார். அத்துடன் வாகனத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டு அலறியடித்த படி தனது தாய் மற்றும் குழந்தையுடன் அங்கிருந்து சரண்யா விலகியதாகவும் கூறப்படுகிறது.
ஸ்கூட்டியில் இருந்து பாம்பு தென்பட்டதால், அப்பகுதியில் கடும் பரபரப்பு நிலவி உள்ளது. உடனடியாக, இது பற்றி கரூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, தகவலறிந்து சம்பவ இடம் வந்த போலீசார், இருசக்கர வாகனத்தின் பாகத்தை பிரித்து எடுத்து பைக்கின் அடியில் சிக்கிக் கொண்டிருந்த சுமார் 2 அடி நீளமுள்ள சாரை பாம்பை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தொடர்ந்து, பாம்பு மீட்கப்பட்ட பின்னர், பைக்கின் பாகங்கள் பிரிக்கப்பட்டிருந்ததால், பைக் பழுது பார்க்கும் நபரை அழைத்து வந்து தனது இரு சக்கர வாகனத்தை சரண்யா பழுது எடுத்து சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஸ்கூட்டி ஓட்டிக் கொண்டிருந்த சமயத்தில், பாம்பு தென்பட்டதால் பெண் பதறி அடித்த சம்பவம், அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read | ஷு-க்குள்ள கேட்ட சத்தம்.. வீட்டை க்ளீன் பண்ணப்போ தெரிய வந்த உண்மை.. ஆடிப் போன பெற்றோர்கள்!

மற்ற செய்திகள்
