பயமா இருக்கு.. யாரோ ஃபாலோ பண்றாங்க.. ஆளில்லாத இடம்.. தனியே போன காதல் ஜோடி.. நடந்தது என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Jan 17, 2022 09:13 PM

கரூர் : தேசிய நெடுஞ்சாலை அருகே காதலர்கள் இருவர் தனியாக பேசிக் கொண்டிருந்த நிலையில், அவர்களை பின் தொடர்ந்து வந்த இளைஞர் செய்த காரியம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

karur lovers alone in night man tried to abuse the girl

கரூர் நகரைச் சேர்ந்த 22 வயதாகும் இளம் பெண் ஒருவர், எம்.ஈ படித்து முடித்துள்ளார். இவர், கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தும் வந்துள்ளார்.

அந்த இளம்பெண், பெருந்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் வந்துள்ளார் இளம்பெண்.

தனியாக இருந்த ஜோடி

தனது காதலியைப் பார்க்க வேண்டி, இளைஞரும் கரூர் வந்துள்ளார். அப்போது, காதலர்கள் இருவரும் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே, தோரணக்கல்பட்டி என்னும் பகுதியிலிலுள்ள மேம்பாலம் ஒன்றில், கடந்த சில தினங்களுக்கு முன், இரவு நேரத்தில், தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

karur lovers alone in night man tried to abuse the girl

பின்தொடர்ந்த நபர்

அந்த சமயத்தில், திடீரென இருவரும், அங்கிருந்த ஒதுக்குப்புறமான இடம் ஒன்றில் ஒதுங்கியுள்ளனர். இதனிடையே, அங்கு இருவரும் அத்துமீற நடந்ததாக கூறப்படுகிறது. இதனை சற்று முன்பிருந்தே கவனித்து வந்த சரவணன் என்பவர், காதலர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

விபரீதம்

காதல் ஜோடிக்கு அருகில் சென்ற சரவணன், அவர்களில் காதலனை அடித்து உதைத்து, பின் துரத்தி விட்டு, இளம்பெண்ணையும் தாக்கி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், இளம் பெண்ணும், அவரின் காதலனும் கத்திக் கூச்சல் போட, அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள், சம்பவ இடத்திற்கு வந்து 2 பேருக்கும் அடி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

karur lovers alone in night man tried to abuse the girl

போலீசாருக்கு தகவல்

தொடர்ந்து, இளம்பெண்ணின் காதலனுடன சரவணனையும் பிடித்து வைத்த கிராம மக்கள், தான்தோன்றிமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன் பின்னர் அங்கு வந்த போலீசார், மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று, விசாரணை மேற்கொண்டனர்.

சிறையில் அடைப்பு

விசாரணையில், இளம்பெண்ணிடம் சரவணன் தவறாக நடந்து கொள்ள முயன்றது, தெரிய வந்தது. பொது இடத்தில் பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டது, அசிங்கமாக பேசி தாக்குதல் நடத்தியது, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், சரவணனைக் கைது செய்து சிறையில் அடைத்ததாக கூறப்படுகிறது.

karur lovers alone in night man tried to abuse the girl

எச்சரித்த போலீசார்

இறுதியில், காதலர்களிடம், இது போன்ற ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் சந்தித்துக் கொண்டால், என்ன நேரும் என்பது பற்றி விவரித்து, எச்சரிக்கவும் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, இது மாதிரி விளைவுகள் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Tags : #KARUR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Karur lovers alone in night man tried to abuse the girl | Tamil Nadu News.