ஒரு கோடி கொசுக்களை கொல்லுவேன், அதுமட்டுமல்ல.. கையில் எலியுடன் வாக்கு சேகரிக்கும் சுயேட்சை வேட்பாளர்
முகப்பு > செய்திகள் > தமிழகம்கரூர்: தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலின் பிரச்சாரம் களைகட்டியிருக்கும் நிலையில் கரூர் மாநகராட்சியின் சுயேட்சை வேட்பாளர் செய்த நூதன முறை பிரச்சாரம் அப்பகுதி மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
![Karur Candidate Election Promise To Kill Mosquitoes Karur Candidate Election Promise To Kill Mosquitoes](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/photo-karur-candidate-election-promise-to-kill-mosquitoes.jpg)
அரசன் போல வாழ்க்கை.. 9 வயசுலையே கெத்து காட்டுறாரு.. உலகமே வியந்து பார்க்கும் நைஜீரிய சிறுவன்
தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வியக்க வைக்கும் தேர்தல் வாக்குறுதிகள்:
பிரபல காட்சிகள் எல்லாம் விளம்பரம் செய்யாமலே அவர்களை நமக்கு தெரியும். ஆனால் சுயேட்சை வேட்பாளர்களின் நிலை அப்படியில்லை. தற்போது சுயேட்சை வேட்பாளர்கள் நூதன முறையில் வேட்புமனுவை தாக்கல் செய்தும், நூதன முறையில் வாக்காளர்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், கரூர் மாநகராட்சி சுயேட்சை வேட்பாளர் தந்த தேர்தல் வாக்குறுதிகளும், அவர் பிரச்சாரம் மேற்கொள்ளும் செயல் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
கையில் எலியுடன் சென்று வாக்கு சேகரிப்பு:
கரூர் மாநகராட்சியில் 26 வது வார்டு பகுதியில் சு.ராஜேஷ் கண்ணன் என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவர் கடந்த திங்கள்கிழமை தன்னுடைய வேட்பு மனு தாக்கல் செய்து, வாக்கு சேகரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளார். இவர் போட்டியிடும் 26 பொது வார்டுக்கு உட்பட்ட, காமராஜபுரம், காமராஜபுரம் மேற்கு, கே வி பி நகர், கணேசா நகர், விஜய் நகர், பாரதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கையில் எலி ஒன்றினை பிடித்தவாறு இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட்டுள்ளார்.
ஒரு கோடி கொசுக்களை கொல்லுவேன்:
அப்போது அப்பகுதி மக்களுக்கு அவர் துண்டு பிரச்சுரங்களும் வழங்கப்பட்டுள்ளது. அதைபார்த்த மக்கள் முகத்தில் சிரித்துள்ளனர். ஏனென்றால் அதில், தேர்தல் வாக்குறுதியாக 1 ஒரு கோடி கொசுக்களை ஒழிப்பதாக அச்சிடப்பட்டிருந்தது. அதே போல் ஒரு லட்சம் கரப்பான் பூச்சிகள், பத்தாயிரம் எலிகள், 100 தெரு நாய்கள் இவைகளை ஒழித்து சுகாதாரமான நிலை ஏற்படுத்துவேன் எனவும் கூறியுள்ளார்.
குப்பைத்தொட்டி சின்னத்தில் போட்டியிட்டவர்:
அதுமட்டுமில்லாமல் அவருடைய இரு மகன்களுடன் காலையிலேயே வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் சு.ராஜேஷ் கண்ணன் கடந்த சட்டசபை தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளை எதிர்த்து கரூர் தொகுதியில் குப்பைத்தொட்டி சின்னத்தில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தலின் போது கரூர் மாநகராட்சியில் கொசுக்கள், எலி மற்றும் கரப்பான் பூச்சிகள் அதிகரித்திருப்பதை மாநகராட்சி நிர்வாகமும், அரசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லாமல் சொல்லி வாக்கு சேகரித்து வருகிறார் சு.ராஜேஷ் கண்ணன்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)