பாலியல் 'வன்கொடுமையால்' 9-வகுப்பு மாணவி கர்ப்பம்... பள்ளி 'சிறுவர்கள்' உட்பட 8 பேர் கைது!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பாலியல் வன்கொடுமையால் 9-வகுப்பு சிறுமி கர்ப்பம் ஆன சம்பவம், கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இந்த நிலையில் உடல்நிலை சரியில்லை எனக்கூறி கோவை அரசு மருத்துவமனைக்கு அந்த மாணவி சிகிச்சை பெற வந்துள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருந்ததை கண்டறிந்தனர். தொடர்ந்து இதுகுறித்து காவல்துறையினருக்கு அவர்கள் தகவல் அளித்தனர்.
தொடர்ந்து இதுதொடர்பாக அனைத்து மகளிர் நிலைய போலீசார் வழக்குப்பதிவி செய்து விசாரணை நடத்தினர். அதில் கடந்த சில மாதங்களாக அந்த மாணவியை சக பள்ளி மாணவர்களும், அக்கம் பக்கத்தினரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிய வந்தது. இதையடுத்து 4 பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
