இடி மின்னலுடன் பலத்த மழை.. "கடல் தண்ணி'ய மேகம் உறிஞ்சு எடுக்குற மாதிரி அதிசய நிகழ்வு".. "எங்க நடந்துச்சு?"
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்ப சலனம் நிலவி வருவதால், கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில், கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வந்த வண்ணம் உள்ளது.

இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழையும், கன்னியாகுமரியின் கடலோர மாவட்டங்களில் பெய்து வந்தது.
அதே போல, கடல் பகுதிகளில் சற்று சீற்றமும் பல இடங்களில் காணப்பட்டு வந்ததாக தெரிகிறது.
கடல் நீரை உறிஞ்சும் மேகம்?
இந்நிலையில், கன்னியகுமரி மாவட்டம் தூத்தூர் பகுதியில் இடி மின்னலுடன் நேற்று பலத்த மழை பெய்துள்ளது. அதே போல, பலத்த காற்றின் காரணமாக கடல் சீற்றமும் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில், திடீரென கடல் நீரை வான் மேகம் உறிஞ்சுவது போல, தண்ணீர் மேல் நோக்கி எழுந்த அதிசய நிகழ்வும் அரங்கேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த நிகழ்வு சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்ததாக கூறப்படும் நிலையில், அங்கிருந்த மீனவர்கள் இதனை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்..https://behindwoods.com/bgm8 https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
