கேப்டவுன் டெஸ்ட் நடக்குமா? மழை ஏதும் குறுக்க வருமா? பிட்ச் யாருக்கு சாதகம்? இந்தியா ஜெயிக்க வாய்ப்பிருக்கா? நிலவரம் என்ன
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகேப்டவுன்: இந்திய கிரிக்கெட் அணி தனது மூன்றாவது டெஸ்டை கேப்டவுன் நகரில் இன்று விளையாட உள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது பங்கேற்று வருகிறது. முதல் போட்டி செஞ்சூரியன் நகரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது. 2வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்றது, இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. தற்போது தென்ஆப்பிரிக்கா உடன் ஒன்றுக்கு ஒன்று என்ற புள்ளி கணக்கில் தொடரில் சமநிலை வைக்கிறது.
இந்த கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி என்ற பெருமையும், இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் முதன் முதலாக வென்ற பெருமையும் கிடைக்கும். இதன்மூலம் இந்த டெஸ்ட் போட்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
மழை வாய்ப்பு: இன்று தொடங்கும் இந்த போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கேப்டவுனில் அதிகபட்சமாக 22 டிகிரி வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 18 டிகிரி வெப்பநிலையில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் ஈரப்பதம் 70 சதவீதமும் காற்றின் வேகம் மணிக்கு 31 கிலோ மீட்டரும் கேப்டவுனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐந்து நாட்களும் வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்படும், மூன்றாவது நாள் நல்ல வெயிலும், இரண்டாவது நாளில் மிதமான மழை பொழிவும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆக இந்த போட்டி மழையால் முழுவதும் பாதிக்கப்பட வாய்ப்பு (20%) மிகக் குறைவு.
மைதானம் எப்படி: கேப்டவுன் நகரம் தென் ஆப்ரிக்காவின் தென் முனையில் அட்லாண்டிக் கடலுக்கு 2 கிமீ தொலைவில் உள்ளதால், ஜோகன்னஸ்பெர்க், செஞ்சூரியன் போல பந்தின் வேகம் அதிகமாக இருக்காது. ஆனால் சீம்மை விட ஸ்விங் இங்கு பெரும் பங்கு வகிக்கும், காற்றின் வேகம் 30 கிமீ என்பதாலும், அருகில் உள்ள டேபிள் மவுண்டனில் மேகக்கூட்டம் இருப்பதாலும், உருவாகும் ஈரப்பதம் ஸ்விங் செய்யும் பவுலர்களுக்கு சாதகம். இதன் காரணமாகவே டேல் ஸ்டெயின் இங்கு அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
உத்தேச அணி விவரம் :
இந்தியா : ராகுல், அகர்வால், புஜாரா, கோலி(C), ரகானே, பண்ட்(WK), அஸ்வின், தாக்கூர், சமி, பும்ரா, இஷாந்த்.
தென்னாப்ரிக்கா: எல்கர்(C), மார்க்ரம், பீட்டர்சன், டுசன், பவுமா, வெர்ரைன்(WK),ஜன்சன், மகாராஜ், ரபாடா, நெகிடி, ஆலிவர்.