"நீ செத்தா யார் வருவா.?" .. இறக்கும் முன்னே தனக்கு கல்லறை கட்டிய பெண்மணி.. இறுதியில் கலங்க வைத்த சோகம்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தாம் இறந்தால் தனக்கு கல்லறை கட்டக்கூட யாருமில்லை என்கிற காரணத்தால் தனக்கு தானே கல்லறை கட்டிய பெண் ஒருவர் ஆதரவின்றி இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Also Read | "ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்.. இப்போ இப்படி ஒரு நிலைமை".. வைரல் புகைப்படத்தின் கலங்கவைக்கும் பின்னணி..!
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்டு வந்தவர் ரோஸி. இவருடைய மறைவு குறித்த உருக வைக்கும் உண்மை தகவல்தான் தற்போது இணையதளங்களில் பலரையும் கண் கலங்க வைத்திருக்கிறது.
60 வயதை கடந்த ரோஸி, தொடக்கத்தில் வீட்டு வேலைகளை செய்து வந்திருக்கிறார். அதன்பிறகு ஊராட்சி சார்பில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அங்கு சென்று வரும் பொழுது அவருடன் வேலை செய்யும் சக மக்கள், ரோஸி உறவுகள் யாரும் இன்றி இருப்பதாகவும், இறுதி காலத்திலும் இறப்பு காலத்திலும் என்ன செய்வாய்? என்றும் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து இதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்த ரோஸி, அவர்கள் சொல்வதற்குள் இருக்கும் விஷயத்தை எடுத்துக் கொண்டார். நூறு நாள் வேலைத் திட்டத்தில், தான் வேலை செய்து சம்பாதித்த பணத்தை வைத்து, ஊராட்சி அனுமதியுடன் தாம் இறக்கும் முன்பே தமக்கென்று ஒரு கல்லறையை கட்டி அதில் தன்னுடைய பெயர் மற்றும் புகைப்படங்களை பொறித்து வைத்து விட்டார்.
மேற்படி அந்த கல்லறையின் பின்புறத்தில் ஒரு வாயில் இருக்கிறது. அதன் வழியே இறந்த பின்பு பிரேதத்தை செலுத்தி அடக்கம் செய்ய முடியுமாறு அந்தக் கல்லறை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஒரு வார காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த ரோஸி, நிராதரவாக தம்முடைய வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.
அவரைக்காண வந்த அக்கம்பக்கத்தினர், சென்று பார்த்தபோதுதான் தகவல் தெரிந்து கொண்டனர். அதன் பின்னர் போலீஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. இதுபற்றி குழித்துறை போலீசார், ரோஸியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்த பின்னர் ரோஸி தனக்குத்தானே கட்டிவைத்த கல்லறைக்கு அவருடைய பிரேதத்தை அடக்கம் செய்வதற்கு அனுப்பி வைத்தனர்.
சக மக்களின் பேச்சால் மனம் வெதும்பி தனக்குத்தானே கல்லறை கட்டி ரோஸியின் செயல் கலங்க வைத்திருக்கிறது.