எப்புடிங்க?? அகம் டிவி வழியே பேசிட்டு இருக்கும்போது வீட்டுக்குள் வந்த இன்னொரு கமல்..! BIGG BOSS ஃபினாலேவில் சுவாரஸ்யம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கிராண்ட் ஃபினாலே நடந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
![Kamal Suprise to Azeem Vikraman Shivin Bigg Boss finale Kamal Suprise to Azeem Vikraman Shivin Bigg Boss finale](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/kamal-suprise-to-azeem-vikraman-shivin-bigg-boss-finale.jpeg)
Also Read | டைட்டில் வென்ற அசிமின் அடுத்த ப்ளான் இதுதானா.? ஃபினாலேவில் அவரே சொன்ன விஷயம்.. bigg boss 6
இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் நடந்து முடிந்த கிராண்ட் ஃபினாலேவில் விக்ரமன் & அசிம் இருவரில் அசிமின் வெற்றியை அறிவிப்பதற்கு முன்பாக, கையை மாற்றி மாற்றி ஆட்டி விளையாட்டு காட்டிய கமல் இறுதியாக அசிம் வெற்றி பெறுவதாக அறிவித்தார். வெற்றி பெற்ற அசிம் கோப்பையை உயர்த்திக்காட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அத்துடன், அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுக்கான காசோலையும், இந்தியாவில் அறிமுகமாகும் மாருதி சுசுகி காரின் பிரஸ்ஸா எனும் மாடலின் முதல் காரும் பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலேவில் பேசிய கமல், வீட்டுக்குள் இருப்பவர்களிடம் பேசலாம், அகம் டிவி வழியே அகத்துக்குள் என சொல்ல, அகம் டிவி வழியே, விக்ரமன், ஷிவின் மற்றும் அசிம் ஆகியோரிடம் கமல் அகம் டிவி வழியே பேசிக்கொண்டிருந்தார். வீட்டுக்குள் எஞ்சி இருந்த இறுதி போட்டியாளர்களான விக்ரமன், ஷிவின், அசிம் ஆகியோர் அகம் டிவியில் தங்களை பார்த்து பேசிக்கொண்டிருந்த கமல்ஹாசனுக்கு ரெஸ்பான்ஸ் செய்துகொண்டிருக்க, அதேவீட்டுக்குள் இன்னொரு கமல் நுழைகிறார்.
அப்போது டிவியில் இருக்கும் கமல், வீட்டுக்குள் நுழையும் அந்த கமலை பார்த்து, “அங்கயுமா?” என ஆச்சரியப்பட, பின்னால் திரும்பிப் பார்த்த இறுதி ஹவுஸ்மேட்ஸூம் ஆச்சர்யத்தில் உறைந்தனர். பின்னர்தான் அது ப்ரீ ரெக்கார்டு செய்யப்பட்ட வீடியோ போல என ஷிவின் உணர்ந்துச் சொன்னார்.
அதன் பின்னர் ஹவுஸ்மேட்ஸ்க்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல், மூவருக்கும் தம் சார்பில் நெகிழ்ச்சியுடன் ஒரு வாழ்த்துக் கடிதம் கொடுத்திருந்தார். பின்னர் வெளியில் சென்று யார் யார் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? என கமல்ஹாசன் அவர்களிடம் வினவினார். இப்படியாக கலகலப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கமல், இறுதிப் போட்டியாளர்களை சந்திக்க வீட்டுக்குள் சென்றார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)