'அப்போ அவுங்க'... 'இப்போ இவரு'... 'தேசிய அளவில் இடம்பிடித்த தி.மு.க.'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 23, 2019 06:14 PM

மக்களவைத் தேர்தலில் மோடி அலையை தடுத்து நிறுத்தி, தேசிய அளவில் 3-வது கட்சியாக தி.மு.க. உருவெடுத்துள்ளது.

dmk makes lead in top 5 national level parties

மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பாஜக 300 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. எனினும், ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களில் அக்கட்சிக்கு தோல்வியே கிடைத்துள்ளது.

ஜெயலலிதா இருக்கும்போது கடந்த 2014 தேர்தலில் 37 இடங்களை பெற்று, இந்தியா அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக அ.தி.மு.க. உருவெடுத்தது. மோடி அலையை தடுத்து நிறுத்தி லேடி அலையாக, தனி ஆளாக தேசிய அளவில் அனைத்து கட்சிகளின் கவனத்தையும் ஜெயலலிதா தனது பக்கம் திருப்பினார்.

தற்போது அதேபோன்று மோடி அலையை தி.மு.க. தலைவரான மு.க.ஸ்டாலின் தடுத்து நிறுத்தியுள்ளார். தமிழகத்தைப் பொருத்தவரை தி.மு.க. கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. வேலூர் நீங்கலாக தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியுள்ளது. தேனி தொகுதியில் மட்டுமே அ.தி.மு..க வென்றுள்ளது. 

17-வது மக்களவையை பொறுத்தவரை பா.ஜ.க. தனியாக 303 இடங்கள் பெற்று முதலிடத்திலும், காங்கிரஸ் 52 இடங்கள் மட்டுமே பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளது. தி.மு.க. 23 தொகுதியில் வென்று மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெயரை பெற்றுள்ளது. இதில் திமுக மட்டும் 20 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து இடங்களையும் கைப்பற்றியது.மேலும் திமுக சின்னத்தில் கூட்டணி கட்சியினர் 3 பேர் போட்டியிட்டு அவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிகள் தலா 22 இடங்களைப் பிடித்து நான்காவது இடத்தில் உள்ளது. சிவசேனா கட்சி ஐந்தாவது இடத்தில் உள்ளது.