'அவருக்கெல்லாம் பெருசா அனுபவம் கிடையாது...' அதனால தோனி கண்டிப்பா 'இத' பண்ணனும்...! - அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டி அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதற்கான காரணம், சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து தோனி ஓய்வு பெற்ற நிலையில் தற்போது அவர் எல்லோ ஜெர்சியில் மட்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். அதுமட்டிமில்லாமல் அவருடன் சேர்ந்து சென்னை மக்கள் அன்பாக சின்ன தல என அழைக்கும் ரெய்னாவின் கம்பேக், தோனியின் பேட்டிங்கை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்
நேற்று வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான நடைபெற்ற போட்டியில் நம்ப குட்டி தல அரைசதம் அடித்து தூள் கிளப்பும் போது ரன் அவுட் ஆனார். சரி சின்ன தல போனால் என்ன பெரிய தல கேப்டன் இருக்கார் என எண்ணிய ரசிகர்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக தல தோனி வந்த 2வது பாலில் டக் அவுட் ஆனார்.
தற்போதைக்கு சி.எஸ்.கே ரசிகர்கள், 'முதல்ல யார் தோக்குற முக்கியம் இல்ல கப் யார் அடிக்கறான்னு தான் முக்கியம்' என சொல்லி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியதாவது, 'நேற்று நடைபெற்ற போட்டியில் இருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை தோனியும் தனது பேட்டிங் குறித்து சில முடிவுகளை எடுக்க வேண்டும்.
தோனி தான் சி.எஸ்.கே அணியை வழிநடத்த வேண்டும் என நான் விரும்புகிறேன். தோனி நிறைய இளம்படைகளை கொண்ட அணியை வைத்திருக்கிறார். அதில் சிலர் மிகவும் இளம்வீரர்கள். சாம் கரன் ஒன்னும் அவ்ளோ அனுபவம் வாய்ந்த வீரர் கிடையாது. சர்வதேச கிரிக்கெட் ஆடுவதால் அவர் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். அதனால் சாம்கரனை 3 அல்லது 4-வது வீரராக களமிறக்கலாம்.
அதுமட்டுமில்லாமல் கடைசியாக ஒரு 4- 5 ஓவர்கள் மட்டும் விளையாடினால் போதும் என தோனி நினைக்கிறாரா என்று தெரியவில்லை. முன்பே வந்தால் தான் களத்தில் அவரால் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியும்.
நேற்று இரண்டாவது பந்தில் அவுட்டாகி வெளியேறியது எல்லா வீரர்களுக்கு நடப்பதுதான். அடுத்தடுத்த தொடரில் அவர் 5 அல்லது 6-வது வீரராக களமிறங்க வேண்டும் என்பது என் எண்ணம்' என கவாஸ்கர் கூறியுள்ளார்.