தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதில்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது: மற்ற மாநிலங்களை போன்று தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும், முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அவர் தெரிவித்துள்ளார். மக்கள் அனுமதிக்கப்பட்ட பொது இடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் பள்ளிகள் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்லக்கூடாது. முதலில் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட வேண்டும்,
வங்கிகள், விடுதிகள், உணவகங்கள், சந்தைகள், அனைத்து மதச்சார்பற்ற கூட்டங்கள், கலாச்சாரக் கூட்டங்கள், போக்குவரத்து ஆகியவற்றில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
அதேபோலத் தற்போது கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தக் கூறியுள்ளோம். இதனால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கலாம். எனினும் தொற்று பாதிப்பைக் குறைக்க முடியும். இதற்கு முதலாவதாக முகக் கவசம் கட்டாயம். அடுத்ததாக, மக்கள் வீட்டுத் தனிமையைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். பாதிப்பு குறைவாக உள்ள அவர்களால் பிறருக்குத் தொற்று ஏற்படுகிறது. நோய் உறுதியானால் மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகின்றது. தற்போது படுக்கைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பள்ளிகளை மூடுவது குறித்து பொது சுகாதார வல்லுநர்கள், பள்ளிக் கல்வித்துறை, தலைமைச் செயலர் ஆகியோர்தான் முடிவெடுக்க வேண்டும்.
மேலும், கடந்த வருடம் தொற்று அதிகம் இல்லாத இடங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என்கிற வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தற்போது சென்னை உட்பட தமிழகமெங்கும் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் முன்னேசெரிக்கையாக மாஸ்க் அணிவது உள்ளிட்ட விசயங்களில் அலட்சியம் காட்டாமல் முறையாக பின்பற்ற வேண்டியது மக்களின் கடமை ஆகும்.

மற்ற செய்திகள்
