சென்னையில் மீண்டும் ஊரடங்கா...? - விளக்கம் அளித்த மாநகராட்சி ஆணையர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவில் தமிழ்நாடு உட்பட 19 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கடந்த 2019 ஆண்டு இந்தியாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் சில மாதங்களாக கட்டுக்குள் இருப்பதாக சுகாதார துறை அறிவித்தது. இந்நிலையில் மீண்டும் போது முடக்கம் தளர்த்தப்பட்ட நிலையில், மக்களில் அலட்சியத்தாலும் மீண்டும் குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு என 19 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது.
மேலும் குறிப்பாக தமிழகத்தின் சென்னையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஊரடங்கு அறிவிக்க வாய்ப்புள்ளதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ், 'சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு வருவதால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்பதை மக்கள் உணர வேண்டும். சென்னையில் 40 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போடுவது அவசியமாக இருக்கும் நிலையில் இதுவரை, 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி போடுவதால் பக்கவிளைவுகள் எதுவும் வராது. சென்னையில் சராசரியாக 350க்கு மேல் பாதிப்பு இருக்கிறது. ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற தகவலில் உண்மையில்லை. ஊரடங்கு குறித்து வதந்தி பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போதும் பொதுக் கூட்டத்திலும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சென்னையில் தேர்தல் பணியில் உள்ள 30 ஆயிரம் பேரில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது' என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.