டீக்கடையில் ‘பார்சல்’ வாங்கிய வடை.. ‘நல்லவேளை குழந்தைங்க சாப்பிடல’.. வீட்டில் பார்சலை பிரித்ததும் காத்திருந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டீக்கடையில் இருந்து வீட்டுக்கு வாங்கி சென்ற வடையில் முழு பிளேடு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த விளாம்பட்டி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கனகராஜ். இவர் நிலக்கோட்டை பேருந்து நிலையத்தின் முன்பு உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு வீட்டுக்கு வடைகளை பார்சலாக வாங்கி சென்றுள்ளார்.
இதனை அடுத்து வீட்டுக்கு சென்று பார்த்தபோது பருப்பு வடை ஒன்றில் முழு பிளேடு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் நிலக்கோட்டை தாலுகா உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் கடைக்காரருக்கு நோட்டீஸ் வழங்கிவிட்டு, வடை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட மாவு, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை குழந்தைகள் அறியாமல் சாப்பிட்டுருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
