பொங்கல் வரை வெளுக்கப் போகும் ‘கனமழை’.. சென்னை நிலவரம் என்ன..? வானிலை மையம் முக்கிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், ‘இலங்கையை ஒட்டியுள்ள குமரிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும். வரும் ஜனவரி 14,15,16 ஆகிய தேதிகளில் பரவலாக மழை நீடிக்கும்.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்’ என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இன்று (12.01.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
