‘கையை அப்டி வெக்கக் கூடாது.. நானும் பாக்ஸர்தான்..’ கலகலப்பூட்டிய அமைச்சர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jun 10, 2019 05:20 PM

அதிமுகவின் அமைச்சர் ஜெயக்குமார் இணையத்தில் எப்போதுமே ட்ரெண்டிங்கில் இருக்கும் முக்கியமான அமைச்சர்களில் முதன்மையானவர். அரசியல், சமூக, திரை உள்ளிட்ட எந்தத் துறையில் இருந்தும் எழக்கூடிய கருத்துக்களுக்கும் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் அவ்வப்போது தன் பேட்டிகளினூடே பதில் தரக் கூடியவர்.

\'I\'m also a boxer\', says TN Minister jayakumar to a girl student

அண்மையில் நீட் விவகாரம் தொடங்கி, அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரம் வரையில், ஜெயக்குமார் கூறிய கருத்துக்கள் இணையத்தில் செய்திகளிலும் ஹாட்டான டாப்பிக்குகளாக வலம் வருகின்றன. அவற்றிற்கான விமர்சனங்களும், ஆதரவு கருத்துக்களும் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார், பரபரவென எப்போதும் பிஸியாக பலவிதமான நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும் செய்து வருகிறார். அவ்வகையில் அண்மையில் பாக்ஸிங் மேட்ச்களின் வெற்றி பெற்ற வீரர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் நிகழ்ந்த விழாவில் கலந்துகொண்ட ஜெயக்குமார், பாக்ஸிங்கில் வெற்றி பெற்ற மாணவியுடன் பாக்ஸிங் விளையாடுவது போல் ஆக்‌ஷன் செய்துள்ளார்.

அப்போது அந்த மாணவியிடம், பாக்ஸர் போல் கைகளை வைத்துக்கொண்டு கிக் கொடுப்பதற்கு தயாரானது போல் போஸ் கொடுத்தார். பின்னர் சிரித்துக்கொண்டே, ‘கையை இப்படி வைக்க வேண்டும். நானும் பாக்ஸர்தான்.. ஓகேவா? .. எங்க பஞ்ச் பண்ணு பாப்போம்’ என்று கூறினார். அந்த மாணவியும் பஞ்ச் செய்வது போல் செய்துகாட்டினார். அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த உற்சாக பேச்சும், செயலும் அங்கு கலகலப்பை ஏற்படுத்தியது.

Tags : #FUN #VIRAL