வெல்க அண்ணண் உதயநிதி.. நாடாளுமன்றத்தில் கோஷமிட்ட திமுக எம்பி.. சபாநாயகர் கொடுத்த சடன் ரியாக்சன்
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி ஒருவர் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பியுள்ளார். இதற்கு சபாநாயகர் கொடுத்த ரியாக்ஷன் வைரல் ஆகி உள்ளது.

நாடாளுமன்றத்தில் தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தொடரில் எம்.எம்.அப்துல்லா, கே.ஆர்.என்.ராஜேஷ் குமார், கனிமொழி சோமு ஆகியோர் தமிழ் மொழியில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்களான கேபி முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எம்.எல்.ஏ-க்களாக வெற்றி பெற்றதால் தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து அந்த இடங்களுக்கான வேட்பாளர்களாக திமுக சார்பில் கனிமொழி, கேஆர்என். ராஜேஷ்குமார் அறிவிக்கப்பட்டு இருவரும் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அப்போது புதிதாக தேர்வானவர்கள் பதவியேற்றுக்கொண்டனர். அப்போது மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு முன்னிலையில் பேச வந்தார் எம்.பி.ராஜேஷ்குமார். ”வெல்க தளபதி... வெல்க அண்ணன் உதயநிதி” என திமுக எம்.பி ராஜேஷ்குமார் நாடாளுமன்றத்தில் கோஷம் எழுப்பினார்.
இதையடுத்து சற்று கோபம் அடைந்த சபாநாயகர் வெங்கையா நாயுடு, "கோஷம் எல்லாம் வெளியில் செய்யுங்கள். வெளியில் நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் சொல்லிக் கொள்ளுங்கள். இந்த கோஷங்களை எல்லாம் அவைக்குறிப்பில் சேர்க்க முடியாது" எனக் கடுமையாகக் கூறினார்.

மற்ற செய்திகள்
