“கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா?”.. ‘கண்டறிய உதவிய மருத்துவமனை உரிமையாளர் கைது!’ .. ‘நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sivasankar K | Jan 20, 2021 03:57 PM

மத்திய அரசின் பாலினத்தை முடிவு செய்தல் தடை சட்டத்தின்படி கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என்பதை சோதனை செய்து தெரிந்து கொள்வது ஸ்கேன் மூலம் கண்டறிய மருத்துவர்கள் உதவுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

hospital owner arrested for scanning and finding babys sex

இந்தியாவில் 1994 ஆம் ஆண்டு பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல் தடைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதே கரு என்ற வார்த்தை சட்டபூர்வமாக வரையறுக்கப்பட்டது. இந்திய மக்கள் ஆண் குழந்தைகளை பெரிதும் விரும்பும் சமுதாயமாக இருப்பதால் பெண் சிசுக்களை அழிப்பது தொடர்ந்தது. இந்த செயலை தடுக்கும் விதமாக இதற்கென ஒரு தனி சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டத்தின்படி பெண் சிசுக்களை பாதுகாக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை மீறி செயல்படும் மருத்துவருக்கும், பெண்ணின் குடும்பத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். ஆனாலும் ஆங்காங்கே இச்சட்டத்தை மீறி கருக்கலைப்புகள் மறைமுகமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவில் கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் 2010 வரை ஒரு கோடி கருக்கலைப்புகள் நடந்ததாக கூறப்படுகிறது. அரசு பெண் குழந்தைகளை காக்க சட்டம் வகுத்து போராடிக் கொண்டிருக்கிறது.

Doctor arrested for scanning and finding babys sex

ஆனால் கடலூர் மாவட்டம் நெய்வேலி பெரிய குறிச்சியில் மகாலட்சுமி என்ற மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் 50 படுக்கைகளுடன் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு மத்திய அரசின் சட்டத்தை மீறி கருவில் இருக்கும் குழந்தையை கண்டறிந்து சொல்வதாக தொடர்ந்து புகார் எழுந்தது.

இந்நிலையில் ஸ்கேன் மூலமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என பாலினம் கண்டறிந்து சொல்வதாக  கடந்த 2014-ம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து அந்த மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடியாக  சோதனை நடத்தினர்.

கருவை கண்டறிந்து சொன்னது உண்மை என விசாரணையில் தெரியவந்தது. இதனால் மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நெய்வேலி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

ALSO READ: “நீ நார்மலாவே ஆடு.. நான் இத பண்றேன்!”.. ‘ஆஸி மண்ணில் இந்தியாவின் வரலாற்று வெற்றி!’.. மைதானத்தில் நடந்த சீக்ரெட் திட்டங்களை போட்டு உடைத்த ரஹானே!

இந்நிலையில் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து  நீதிபதி மருத்துவ ராமச்சந்திரனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Hospital owner arrested for scanning and finding babys sex | Tamil Nadu News.