"சித்து கஞ்சா அடிச்சிருக்கணும்".. "கதவ பீஸ் பீஸா உடைச்சுருப்பேன்.. என் புத்தி தெரியும்ல?" - நண்பருடன் ஹேமந்த் பேசும் முழு AUDIO!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sivasankar K | Jan 20, 2021 05:04 PM

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமின் கோரப்பட்ட நிலையில், ஹேமந்தின் 10 வருட நண்பரான சையது ரோஹித், ஹேமந்தின் ஜாமினுக்கு எதிரான தனது மனுவைத் தாக்கல் செய்து அதிரவைத்தார்.

hemnath friend shares hemnath phone talk full audio chithra case

அத்துடன் கூடவே ஒரு ஆடியோவையும் வெளியிட்டார். இந்நிலையில் இதுபற்றி பிஹைண்ட்வுட்ஸுக்கு அளித்த பேட்டியில் விரிவாக பேசியுள்ளார் ரோஹித். மேலும் மற்றுமொரு ஆடியோவை முழுமையாக பகிர்ந்துள்ளார். அத்துடன் சித்ரா இறந்த 2வது நாளே ஹேமந்துடன் பேசி, அந்த ஆடியோவை பதிவு செய்ததாகவும், இதுபற்றி கோர்ட்டில் மனு அளித்ததாகவும் ரோஹித் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அவர் பகிர்ந்துள்ள அந்த முழுமையான ஆடியோவில், ரோஹித்திடம் ஹேமந்த் சில விஷயங்களை பேசுகிறார். அதில், போலீஸ் அனைத்து ஆடியோக்களையும், தன் போனையும் கூட எடுத்துக் கொண்டதாகவும், 4 நாட்களாக சாப்பிடாமல் அழுததாகவும் குறிப்பிடுகிறார். சித்ரா இறந்த அன்று தங்களுக்குள் சண்டையே கிடையாது என்று கூறிய அவர், சித்ராவின் அம்மாவிடம் தான் ஒரு காலத்தில் மோசமாக நடந்துகொண்டதைச் சொன்னதால், சித்ராவின் அம்மாவுக்கும் சித்ராவுக்கும் தகராறு எழுந்துள்ளதாக குறிப்பிடுகிறார். அதனால் தாயார் வீட்டுக்கு செல்ல முடியாது என்பதை இறப்பதற்கு முதல் நாள் இரவு சித்ரா ஹேமந்துடன் பகிர்ந்துள்ளார்.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சித்ரா தனியாக சென்றுவந்ததாக ரோஹித்திடம் கூறும் ஹேமந்த், சித்ரா அறைக்கு வந்தும் சோகமாக இருந்ததாகவும், அப்போது சக நடிகருடன் ஆடியது பற்றி சித்ராவிடம் ஹேமந்த்திடம் கூறியதாகவும், அதற்கு ‘ஏன் பட்டு இப்படி பண்ற?’ என செல்லமாய் கோபித்துக் கொண்டு தம் அடித்துவிட்டு சென்றதாகக் கூறுகிறார். அப்போது அறைக்கதவைத் தாழிட்டுக் கொண்ட சித்ரா தற்கொலை செய்துகொண்டதாகவும், ‘தங்கம் கதவ திற?’ என, தான் கேட்டதாகவும் ஹேமந்த் கூறியிருக்கிறார்.  அந்த அறையில் மின்விசிறி இருந்ததாகவும், அனைவர் முன்னிலையும் தைரியமாய் இருக்கும் சித்ரா, யாரும் இல்லையென்றால் மூலையில் உக்காந்தோ, காரில் உட்கார்ந்தோ தனியாக அழுவார் என்றும் ஹேமந்த் ரோஹித்திடம் கூறுகிறார். 

மேலும் பேசிய ஹேமந்த், “சித்ராவிடம் நிறைய பேர் என்ன பத்தி சொல்லிருக்காங்க. ஆனா யார்னு எங்கிட்ட சொல்ல மாட்டா கல்லுளி மங்கி அவ. தற்கொலை பண்ணிக்கிட்ட அன்னைக்கு நான் சித்ராவுடன் சண்டை போட்டிருந்தா கதவ பீஸ் பீஸா உடைச்சுருப்பேன். உனக்கு என் புத்தி தெரியும்ல? ரோஹித்.? ஆனால் என் விரல் கூட அவ மேல படல. அவ யார் கூடயோ சேர்ந்து கஞ்சா அடிச்சிருக்கானு ஒரு சந்தேகம் இருக்கா. கடைசி ஒரு 3 நாளா சித்ராவை பணம் கேட்டு சித்ராவின் தாயார் சித்ராவை வெச்சு செஞ்சுட்டார். அதுவும் அவளோட மன உளைச்சலுக்கு காரணம். அன்னைக்கு நான் அடிக்கவே இல்லை. புரிஞ்சுக்கோ. சித்ராவின் இறப்புக்கு முன்னரே அவருடைய தலையில் அடிபட்டிருக்கு. சித்ரா என்னை சுத்தியே தான் இருப்பா. தியாகி மாதிரி செத்துட்டா. பைத்தியகாரி. இதையெல்லாம் யாரிடமும் சொல்லக் கூடாது. நான் என்னை நிரூபித்துவிட்டு நானும் செத்துடுவேன் டா!” என்று வாட்ஸ் ஆப் காலில் பேசியுள்ளார். சைபர் போலீஸார் இந்த ஆடியோவை கைப்பற்றினர்.

ALSO READ: “அம்மு, தங்கம்.. பட்டு ஏம்மா இப்படி பண்ற? .. தம் இழுத்துட்டு கதவ தட்டினேன்.. பாவி!!” - ஹேம்நாத் ஜாமீனுக்கு எதிராக 10 வருட நண்பர் மனு!.. கூடவே வெளியிட்ட பரபரப்பு ஆடியோ!

மேலும் இதுபற்றி பல்வேறு விஷயங்களை பதிவு செய்துவரும் ரோஹித், சித்ராவை ஹேமந்த் ரத்தம் வரும் அளவுக்கு அடித்து துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிர் விலை மதிப்பில்லாதது. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Hemnath friend shares hemnath phone talk full audio chithra case | Tamil Nadu News.