RRR Others USA

இ-நாமினேஷன், ஜிஎஸ்டி ரிட்டன்ஸ்... எல்லாத்துக்கும் கால அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Rahini Aathma Vendi M | Dec 30, 2021 07:35 PM

பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் பயனாளர்கள் தங்களது கணக்கில் இ-நாமினேஷன் தாக்கல் செய்ய டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் இ-நாமினேஷன் உள்ளிட்ட பல முக்கிய அலுவல் வேலைகளுக்கும் கால அவகாசம் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

deadline extended for PF e-nomination, gst returns

EPFO இ-நாமினேஷன் செய்ய டிசம்பர் 31-ம் தேதி 2021 வரையில் தான் கால அவகாசம் கொடுத்திருந்தது மத்திய அரசு. இதனால் பயனாளர்கள் தங்களது நாமினி தகவல்களை அப்டேட் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மேலும், பலரும் இ-நாமினேஷன் தாக்கல் செய்ய KYC அப்டேட் செய்யவும் EPFO இணைய பக்கத்தில் குவிந்து வந்தனர்.

deadline extended for PF e-nomination, gst returns

இதனால் கடந்த ஒரு வாரமாகவே சரியாக இயங்காமல் இருந்து EPFO தளம் தற்போது முற்றிலும் பயன்படுத்த முடியாது முடங்கி உள்ளது. ட்விட்டர் உள்ளிட்ட சமுக வலைதளங்களில் பயனாளர்கள் இதுகுறித்த புகார்களை பதிவு செய்து வருகின்றனர். டிசம்பர் 31-ம் தேதி கடசி நாள் ஆக இருக்கும் போது அரசு EPFO தளத்தை அப்டேட் செய்து பயனாளர்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.

deadline extended for PF e-nomination, gst returns

இந்த சூழலில் பிஎஃப் பயனாளர்கள் தங்களது நாமினி பெயரை அப்டேட் செய்ய கால அவகாசம் தருவதாக அறிவித்துள்ளது. குறிப்பிட்ட தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகும் நாமினி அப்டேட் செய்யலாம். மேலும், வருடாந்திர ஜிஎஸ்டி ரிட்டன்ஸ் தாக்கல் செய்யவதற்கும் பிப்ரவரி 28-ம் தேதி வரையில் கால அவகாசம் அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

deadline extended for PF e-nomination, gst returns

வங்கிகளில் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது KYC-யை அப்டேட் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கும் தற்போது 3 மாத கால அவகாசம் நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31, 2022 வரையில் இதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Tags : #GST #பிஎஃப் #பிஎஃப் இ-நாமினேஷன் #ஜிஎஸ்டி #PF #PF E-NOMINATION #GST RETURNS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Deadline extended for PF e-nomination, gst returns | Business News.