RRR Others USA

திமுக எம்.எல்.ஏ-வின் பதக்க வேட்டை... ஆசிய வலுதூக்கும் போட்டியில் இந்திய அணி சார்பில் அபார வெற்றி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Rahini Aathma Vendi M | Dec 30, 2021 06:58 PM

ஆசிய வலுதூக்கும் போட்டியில் சங்கரன்கோவில் திமுக எம்.எல்.ஏ ராஜா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார்.

DMK MLA raja won medal in asian weightlifting championship

துருக்கியில் இஸ்தான்புல் நகரில் ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் சார்பால ராஜா என்பவர் கலந்து கொண்டார். இவர் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ஆவார். திமுக-வைச் சேர்ந்த ராஜா எம்.எல்.ஏ இந்திய அணியை முன்னிறுத்தி வலுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டார்.

DMK MLA raja won medal in asian weightlifting championship

தென்காசி மாவட்டத்தில் இருந்து துருக்கி வரை சென்று தற்போது சாதனை படைத்துள்ளார் ராஜா. ஆசிய போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி உள்ளார் ராஜா. இந்தியாவுக்கு மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த எம்.எல்.ஏ ராஜா-வை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டி உள்ளார்.

DMK MLA raja won medal in asian weightlifting championship

ஆசிய வலுதூக்கும் போட்டியில் இந்திய அணியின் சார்பாக பங்கேற்ற ராஜா 140 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டார். இந்தப் பிரிவில் தான் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார் ராஜா. துருக்கியில் நடந்த ஆசிய போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் காமன்வெல்த் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார் எம்.எல்.ஏ ராஜா.

DMK MLA raja won medal in asian weightlifting championship

காமன்வெல்த் போட்டிகள் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்றது. நியூசிலாந்து காமன்வெல்த் போட்டியில் இந்திய அணியின் சார்பாக வலுதூக்கும் போட்டியில் கலந்து கொள்கிறார் ராஜா. இதனால் ராஜாவுக்கு பல தரப்புகளில் இருந்தும் பலமான பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags : #சென்னை #சங்கரன்கோவில் எம்.எல்.ஏ #திமுக எம்.எல்.ஏ #எம்.எல்.ஏ ராஜா #வலுதூக்கும் போட்டி #DMK MLA #SANKARANKOVIL MLA #MLA RAJA #WEIGHTLIFTING CHAMPIONSHIP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. DMK MLA raja won medal in asian weightlifting championship | Tamil Nadu News.