மருந்து "ரெடி" என ஊரை ஏமாற்றி ... போலீசிடம் சிக்கிய வாலிபர் ... வெளியான அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Apr 10, 2020 09:21 PM

கொரோனா வைரஸ் உலகம் முழுவதுமுள்ள நாடுகளை அதிகமாக அச்சுறுத்தியுள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் வைரஸ் தொற்றிற்கு உயிரிழக்கவும் செய்துள்ளனர். இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Guy sold fake medicine for Corona Virus in Kanchipuram

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் பொதுமக்களிடையே விற்பனை செய்துள்ளார். கொரோனா வைரஸிற்கு தன்னிடம் மருந்து இருப்பதாக கூறிய அந்த நபரை நம்பி ஏராளமான பொதுமக்கள் அந்த நபரை சூழ்ந்து நின்றுள்ளனர்.

பொதுமக்கள் கூடியதை அங்கிருந்து போலீஸ் கவனித்து விசாரிக்க, மோசடியில் ஈடுபட்ட அந்த ஒடிசா வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். அவரை மடக்கிப் பிடித்து போலீசார் விசாரித்ததில், சளி மற்றும் இருமலுக்கான மருந்தை கலந்து கொரோனா வைரஸிற்கான மருந்து என ஏமாற்றி விற்க முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது. மேலும், அவர் மாம்பாக்கம் பகுதியில் பீடா கடை வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. அந்த நபரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலகமே கொரோனாவிற்கு மருந்து கிடைக்காமல் அல்லோலப்பட்டு வரும் நிலையில், நபர் ஒருவரின் பேச்சை கேட்டு மக்கள் கூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அதனை அரசே அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.