"வெறித்தனமான சினிமா ரசிகரா இருப்பாரோ"... 17 வருசமா தியேட்டரில் பார்த்த 470 படங்கள்.. வைரலாகும் குறிப்புகள்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Feb 28, 2023 11:10 AM

நாம் சமூக வலைத்தளத்தை திறந்தாலே நம்மை சுற்றி நடக்கும் எக்கச்சக்கமான விஷயங்கள் அதில் கொட்டி கிடக்க தான் செய்கிறது. இதில் பல விஷயங்களை நாம் இயல்பாக கடந்து சென்றாலும் சில விஷயங்கள், நம்மிடையே ஒருவித வியப்பை ஏற்படுத்தி பலரது மத்தியில் பேசு பொருளாக மாறும்.

Grandfather lists movies he watched in theatres grandson viral tweet

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | "தியேட்டர்ல பாத்த முதல் விஜய் படம் பீஸ்ட்".. Halamathi Habibo அர்த்தம் இது தான்.. நீயா நானா வைரல் சூடான் இளைஞர் Exclusive!!

அந்த வகையில் ஒரு சம்பவம் குறித்த ட்விட்டர் பதிவு தான் தற்போது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. நம்மில் பலரும் சினிமா மீது தீவிர ரசிகர்களாக நிச்சயம் இருப்போம். அதிலும் வீட்டில் இருந்து பார்ப்பதை விட திரை அரங்கிற்கு சென்று திரைப்படங்கள் பார்ப்பதை பெரிதும் விரும்பும் ஆட்களாக கூட இருப்போம். ஆனால், நாம் பார்க்கும் படங்கள் எண்ணிக்கையை குறிப்பிடாமல் அதனை கடந்து சென்று கொண்டே இருப்போம்.

அப்படி இருக்கையில் கடந்த பல வருடங்களுக்கு முன்பாக நபர் ஒருவர் தான் திரையரங்குகளில் பார்த்த படங்களின் பெயர், கொட்டகை, மொழி, நேரம், கட்டணம் உள்ளிட்ட விவரங்களை ஒரு நோட்டு புத்தகத்தில் தன் கைப்பட எழுதி வைத்துள்ளது தொடர்பான புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

Grandfather lists movies he watched in theatres grandson viral tweet

Images are subject to © copyright to their respective owners.

இதனை அந்த நபரின் பேரன் தான் தற்போது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அக்ஷய் என அறியப்படும் அந்த ட்விட்டர் பயனாளி, தனது தாத்தா திரையரங்கில் பார்த்த திரைப்படங்களின் பெயர்கள் உள்ளிட்ட நோட்டு புத்தகத்தின் புகைப்படங்களை பகிர்ந்து, "நீண்ட நாட்களுக்கு முன்பு எனது தாத்தா அவர் பார்த்த திரைப்படங்களை பதிவு செய்ய ஒரு நோட்டுப் புத்தகத்தை வைத்திருந்துள்ளார். இது அவர் உருவாக்கிய சொந்த Letterboxd என்றே சொல்லலாம். இதில் ஹிட்ச்காக் மற்றும் ஜேம்ஸ் பாண்ட் ஆகியோரின் படங்களை அவர் திரையரங்கில் பார்த்தது வியப்பாக உள்ளது.

அதே போல, அன்பே வா படத்தையும் (1966), கம் செப்டம்பர் (1961) என்ற ஆங்கில படத்தையும் அவர் திரை அரங்கில் பார்த்துள்ளார். கம் செப்டம்பர் படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் அன்பே வா. இரண்டையுமே அவர் திரையரங்கில் பார்த்துள்ளார்" என்றும் வியப்புடன் அந்த இளைஞர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Grandfather lists movies he watched in theatres grandson viral tweet

Images are subject to © copyright to their respective owners.

1958 முதல் 1974 வரையில் வெளியான மொத்தம் 470 திரைப்படங்கள் குறித்த விவரங்கள் இதில் குறிப்பிடப்பட்டதாக தெரியும் சூழலில் பலரும் இதனை மிக வியப்புடன் பார்த்து வருகின்றனர். அந்த காலத்திலேயே இப்படி ஒரு தீவிர சினிமா ரசிகர் என்பதுடன் மட்டுமல்லாமல் ஆங்கிலம், தமிழ் என பல மொழிகளில் திரைப்படங்களையும் திரையரங்கில் அவர் சென்று பார்த்ததும் தற்போது உள்ள சினிமா விரும்பிகளை ஒரு நிமிடம் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Also Read | கல்யாணம் முடிஞ்சு வரும்போது கண்கலங்கிய மனைவி.. முதல்வர் முக ஸ்டாலின் சொன்ன ஒரே வார்த்தை!!

Tags : #GRANDFATHER #MOVIES #THEATRES #GRANDSON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Grandfather lists movies he watched in theatres grandson viral tweet | Tamil Nadu News.