பெண் குழந்தை பிறந்தா 1 ரூபா கூட மருத்துவ கட்டணம் கிடையாதா.? இந்தியாவுல இப்படி ஒரு டாக்டரா..?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Nov 07, 2022 08:02 PM

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மருத்துவர் ஒருவர் தனது மருத்துவமனையில் பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு இலவசமாக பிரசவம் பார்த்து வருகிறார். இதனால் அப்பகுதி மக்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

Pune doctor delivers baby girls for free at his hospital

Also Read | விராட் கோலிக்கு ICC கொடுத்த அங்கீகாரம்.. கொண்டாடித்தீர்க்கும் ரசிகர்கள்.. இதுதான் விஷயமா?

டாக்டர். கணேஷ் ராக் மகாராஷ்டிராவில் உள்ள ஹடப்சர் பகுதியில் ஒரு மகப்பேறு மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை நடத்தி வருகிறார். பெண் சிசுக்கொலைகளை தடுக்கும் விதமாக இவர் "பேட்டி பச்சாவோ ஜனந்தோலன்" எனும் திட்டத்தை தனது மருத்துவமனையில் செயல்படுத்திவருகிறார். இதன் மூலம், தனது மருத்துவனையில் பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு இலவசமாக பிரசவம் பார்த்துவருகிறார் டாக்டர்.கணேஷ் ராக். கடந்த 11 ஆண்டுகளில் 2400 பெண்களுக்கு இப்படி இலவசமாக பிரசவம் பார்த்து சாதனை படைத்திருக்கிறார் இவர்.

Pune doctor delivers baby girls for free at his hospital

அதுமட்டுமின்றி, இவரது மருத்துவமனையில் பிறந்த அனைத்து பெண் குழந்தைகளும் மருத்துவமனை ஊழியர்களிடம் இருந்து உற்சாக வரவேற்பினைப் பெறுகின்றனர். ஒவ்வொரு முறையும் ஒரு தாய் இந்த மருத்துவமனையில் பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது, ​​கேக் வெட்டி பெற்றோர்கள் மீது இதழ்களைப் பொழிந்து ஒரு பெரிய கொண்டாட்டத்தை மருத்துவமனை ஏற்பாடு செய்கிறது. தாய்மார்கள் மற்றும் அவர்களது கைக்குழந்தைகள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் ஒரு அலங்கரிக்கப்பட்ட ஆட்டோ ரிக்ஷாவில் வீட்டிற்குச் செல்ல மருத்துவர் கணேஷ் ஏற்பாடும் செய்துகொடுக்கிறார்.

இதுபற்றி பேசியுள்ள கணேஷ்,"நாங்கள் ஒரு பெண் குழந்தை பிறந்ததை கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடுகிறோம். மேலும் அந்த குழந்தையுடைய பெற்றோரையும் நாங்கள் மகிழ்விக்கிறோம். 11 ஆண்டுகளில் எங்கள் மருத்துவமனையில் கிட்டத்தட்ட 2430 பெண் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும் போதும் மருத்துவமனையில் இந்த கொண்டாட்டம் நடைபெறும்" என்றார்.

Pune doctor delivers baby girls for free at his hospital

இந்த திட்டம் துவங்கப்பட்டது குறித்து பேசிய அவர்,"2012க்கு முன் மருத்துவமனையின் ஆரம்ப ஆண்டுகளில், சில சமயங்களில் பெண் குழந்தை பிறந்தால், குடும்ப உறுப்பினர்கள் குழந்தைகளை பார்க்க வராமல் இருந்ததை பார்த்திருக்கிறோம். அது என்னைத் தாக்கி, பெண் குழந்தைகளைக் காப்பாற்றவும், பாலின சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஏதாவது செய்ய வேண்டும் என்று என்னைத் தூண்டியது" எனக் கூறியுள்ளார்.

பெண்குழந்தைகள் பிறந்தால் இலவசமாக பிரசவ பார்த்துவரும் மருத்துவர் கணேஷ் ராக்-ன் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Also Read | ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகும் கவிப்பேரரசு வைரமுத்துவின் பிரபல புத்தகம்..!

Tags : #HOSPITAL #DOCTOR #DELIVER #BABY GIRLS #DOCTOR DELIVERS BABY GIRLS FOR FREE #PUNE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pune doctor delivers baby girls for free at his hospital | India News.