அதெல்லாம் சும்மா 'வதந்தி' யாரும் நம்பாதீங்க... 'ஹோட்டல்' உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உணவு கட்டணம் உயர்வு குறித்து வெளியான தகவல்களுக்கு, ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
நீண்ட நாட்களுக்குப்பின் ஹோட்டல்களில் நாளை முதல் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 50% இருக்கைகள் தான் பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் ஹோட்டல்களில் கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம் என கூறப்பட்டது.
இந்த நிலையில், ''தமிழகம் முழுவதும் உணவகங்களில் பழைய கட்டணமே தொடரும். உணவு கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியாகும் தகவல் உண்மை இல்லை'' என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
உணவகம் திறப்பு மற்றும் அதன் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த தகவல்களை தமிழக அரசின் விதிமுறைகள்:-
* உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும்.
* உணவகங்களில் நுழைவதற்கு முன் வாடிக்கையாளர்கள் கைகழுவ சோப்பு, சானிடைசர் வைத்திருக்க வேண்டும்.
* உணவகங்களில் 50% இருக்கைகளில் மட்டுமே வாடிக்கையாளர் அமர்ந்து உணவு உண்ண அனுமதி
* உணவகங்களில் சாப்பிடும் டேபிள்களுக்கு இடையே 1 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
* உணவகங்களில் ஏசி பயன்படுத்தக் கூடாது.
* ஜன்னல்கள் திறக்கப்பட்டு காற்றோட்டமாக இருக்க வேண்டும்.
* உணவகங்களில் உள்ள கழிவறைகளை நாள்தோறும் 5 முறை கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.
* உணவகங்களில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட பின் நாற்காலி மற்றும் டேபிளை கிருமி நாசினி கலந்த நீரால் சுத்தம் செய்ய வேண்டும்.
* உணவகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால் கண்டிப்பாக உணவகங்களில் அனுமதிக்கக்கூடாது.
* பணியாளர்கள் அனைவரும் முககவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
* அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்றவை சமைப்பதற்கு முன் நன்றாக சுத்தம் செய்யப்பட வேண்டும்.