'திமுக தலைவராக’ சந்திக்கும் முதல் லோக்சபா தேர்தல்.. வாக்களித்த மு.க.ஸ்டாலின், அன்பழகன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 18, 2019 10:09 AM

இந்திய துணைக்கண்ட ஜனநாயகத்தின் முக்கிய நாளாக, பொதுத் தேர்தல் நாளான இன்றைய நாள் பார்க்கப்படுகிறது.

DMK President MK Stalin and General secretary Anbazhagan voting video

அரசியலாளர்கள் தொடங்கி பொதுமக்கள் அனைவருமே ஜனநாயகக் குடிமகனாக, சாமானியனாக தங்களது வாக்களிக்கும் கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் தேர்தல் நாளை, ஒரு திருவிழாவைப் போன்றதொரு புத்துணர்ச்சியான நாளாகக் கருதுவர்.

அவ்வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது வாக்கினை பதிவு செய்வதற்காக தென் சென்னை தொகுதியில் உள்ள தேனாம்பேட்டை SIET கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு பிறகு மு.க.ஸ்டாலின் சந்திக்கும் முதல் பாராளுமன்றத் தேர்தல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல்  திமுக பொதுச் செயலாளரும் மூத்த தலைவர்களுள் முக்கியமானவருமான க. அன்பழகன், தென் சென்னை தொகுதி நாடாளுமன்றத் தொகுதியில் வாக்களிக்கும் விதமாக அந்தத் தொகுதியின் முக்கியமான வாக்குச் சாவடியான மைலாப்பூரில் தனது வாக்கினை பதிவு செய்வதற்காக வருகை தந்தார்.