மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறு பேச்சு!.. பாதிரியார் கைதான வழக்கில் புதிய திருப்பம்!.. சல்லடை போட்டு சலிக்கும் காவல்துறை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய விவகாரத்தில் பாதிரியார் கைது செய்யப்பட்டதை அடுத்து மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் கடந்த 18ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சில சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார்.
அதில், இந்து கடவுள்கள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி ஆகியோரை அவதூறாக பேசியதோடு, திமுக தேர்தல் வெற்றி குறித்தும் அவர் தெரிவித்த கருத்துகள் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியது. அதைத் தொடர்ந்து, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கருத்துக்கு பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் ஜார்ஜ் பொன்னையா கலந்து கொண்டு பேசிய போராட்டத்தை ஏற்பாடு செய்த கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் உள்பட 3 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, ஜார்ஜ் பொன்னையாவை நேற்று முன்தினம் கைது செய்த காவல்துறை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் அவரை சிறையில் அடைத்தனர்.

மற்ற செய்திகள்
