"மனசு ரொம்ப வேதனையா இருக்கு"!.. குழந்தை மித்ராவுக்காக களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்!.. கோடிக்கணக்கானோர் பிரார்த்தனை கைகூடுமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்குழந்தை மித்ராவிற்கு செலுத்தப்படக்கூடிய ஊசிக்கான இறக்குமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பல அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி மித்ராவிற்கு முதுகுத்தண்டில் எஸ்.எம்.ஏ என்று சொல்லக்கூடிய அரிய வகை நோய் இருப்பதாகவும், அதை சரி செய்ய 16 கோடி மதிப்புள்ள ஊசி செலுத்தப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். Crowd funding மூலம் தற்போது 16 கோடி வரை கிடைத்துள்ளது.
ஆனால், எஸ்எம்ஏ-விற்கு செலுத்தப்படும் ஊசியின் விலை 16 கோடி ரூபாய் மட்டுமின்றி, கூடுதலாக இறக்குமதி வரி 6 கோடி ரூபாய் இந்திய அரசிற்கு செலுத்தப்பட வேண்டும். மொத்தம் ஊசியின் மொத்த மதிப்பு 22 கோடி ஆகும்.
இந்நிலையில், "முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும்போது வரி விலக்கு அளிக்க வேண்டும். மருந்துகளை இறக்குமதி செய்யும்போது சுங்கவரி, ஜிஎஸ்டி, இதர வரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்" என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆறு கோடி இறக்குமதி வரி தள்ளுபடி செய்யப்படும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் மித்ராவின் பெற்றோர்.
சிகிச்சைக்கு ரூ.16 கோடி தேவைப்படும் இந்நோயால் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 90-100 குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
குழந்தைகள் இப்படி அல்லற்படக் கூடாது.
மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்க - கொள்கை முடிவு எடுக்க வலியுறுத்தி மாண்புமிகு நிதியமைச்சர் @nsitharaman-க்கு கடிதம் எழுதியுள்ளேன். pic.twitter.com/gJauh6FEYi
— M.K.Stalin (@mkstalin) July 13, 2021