தமிழக இளைஞர்களுக்கு அடித்திருக்கும் ஜாக்பாட் ஆஃபர்!.. ரூ.17,141 கோடி!.. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jul 20, 2021 05:21 PM

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 35 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதால், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

tamil nadu government cm mk stalin sign mou for 35 projects

சென்னை கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு' விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தொழில்துறை முதன்மை செயலாளா் முருகானந்தம், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பூஜா குல்கா்னி உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.17,141 கோடி முதலீட்டில் 35 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 55 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

ஆட்டோமொபைல், காற்றாலை, எரிசக்தி, சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளன.

குறிப்பாக, கேப்பிட்டல் லாண்ட், அதானி, ஜே.எஸ்.டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழக அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மேலும், இந்த நிகழ்ச்சியின் வழியே ரூ.4,250 கோடி மதிப்பில் 9 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.7,117 கோடி மதிப்பிலான 5 திட்டப் பணிகளையும் முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.

     

இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, "புதிய திட்டங்கள் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 83,432 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்" எனக் கூறினார்.

இதற்கிடையே, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், "தமிழ்நாட்டின் கலை, பண்பாடு மிகவும் தொன்மையானது. நம்பிக்கையூட்டும் எதிர்காலத்தை அளித்து வந்துள்ளது. தமிழ்நாடு போட்டி என்பது வாழ்வின் அனைத்து பக்கங்களிலும் எழுதப்படாத சட்டமாகவுள்ளது" எனத் தெரிவித்தார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tamil nadu government cm mk stalin sign mou for 35 projects | Tamil Nadu News.