'இதுவரைக்கும் 'அவங்க' ஒருத்தருக்கு கூட கொரோனா இல்ல!'.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனை 'பரபரப்பு' கருத்து!.. முதற்கட்ட ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Aug 28, 2020 04:13 PM

ஓமந்தூரார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் காசநோய்க்காக மருந்து எடுத்துக்கொண்ட நோயாளிகள் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டவில்லை என்பது தெரியவந்தது.

chennai omandhurar hospital research tuberculosis bcg vaccine corona

கொரோனாவை போன்று இந்தியாவில் மிக கொடுமையான பாதிப்பை மறைமுகமாகவும், தீவிரமாகவும் ஏற்படுத்தி கொண்டிருக்கும் நோய், காசநோய். இந்தியாவில், நாள் ஒன்றுக்கு 1150 பேரையும், வருடத்திற்கு நான்கு லட்சம் பேரின் உயிரையும் இழக்கச்செய்கிறது.

காற்றில் பரவும் கொடூரமான நோய், இதை தடுக்க தான் BCG தடுப்பூசிகள் குழந்தை பிறந்த உடனே போடப்படுகின்றது. 1940-களுக்கு பிறகு இந்தியாவில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் காசநோய் தடுப்பூசி போடப்படுகின்றது.

நமது அனைவரின் வலது கையின் மேல் பகுதியில் ஏற்பட்டுள்ள தழும்புதான், இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான அடையாளம். இந்த தடுப்பூசியை உலகில் இந்தியா போன்ற நாடுகள் முழுமையாக பயன்படுத்துக்கின்றன.

BCG தடுப்பூசியை பயன்படுத்தும் நாடுகளில் கொரோனாவால் ஏற்படும் இறப்பு குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் கிடைத்துள்ளன. அதனால், அமெரிக்கா போன்ற நாடுகள் அது பற்றிய ஆய்வையும் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் காசநோய்க்காக மருந்து எடுத்துக்கொண்ட நோயாளிகள் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டவில்லை என்பது தெரியவந்தது.

காசநோயானது பாக்டீரியா தொற்றால் ஏற்பட கூடியது. அதற்காக கொடுக்கப்படும் மருந்துகள் Ig வகை ஆன்டிபாடிகளை ஏற்படுத்துவதால், அதில் உள்ள G வகை தடுப்பு சக்தி கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதாக முதற்கட்ட ஆய்வுகள் தெரியவந்துள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai omandhurar hospital research tuberculosis bcg vaccine corona | Tamil Nadu News.