'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Aug 27, 2020 07:02 PM

தமிழகத்தில் இன்று (27-08-2020) ஒரே நாளில் 5981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

tn coronavirus updates and statistics as on august 27

கொரோனா பாதிப்படைந்த 5981 பேரில் 5951 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 30 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதார துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 4,03,242 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 52,364 ஆக உள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,29,247 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்பத்தூரில் 439 பேருக்கும், செங்கல்பட்டில் 298 பேருக்கும் கடலூரில் 261 பேருக்கும்1,30,564 கொரோனா உறுதியாகியுள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 5,870 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுமுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,43,930 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொருத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 79 பேர், தனியார் மருத்துவமனையில் 30 பேர் என மொத்தம் 109 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6,948 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை தமிழகத்தில் மொத்தம் 43,47,511 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார துறை அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tn coronavirus updates and statistics as on august 27 | Tamil Nadu News.