'என்ன சார் பண்ண முடியும்?.. படிச்ச படிப்புக்கு தகுந்த வேல கிடைக்கமா'... முதுகலை பட்டதாரிகளுக்கு இப்படி ஒரு நிலைமையா!?
முகப்பு > செய்திகள் > இந்தியாஜெய்ப்பூரில் 1,162 பேர் பிச்சை எடுப்பதாகவும், அதில் 5 பேர் பட்டதாரிகள் என்பதும் தெரியவந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை தொடர்பாக நகர போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி 1,162 பேர் பிச்சை எடுத்து வருவதாக தெரியவந்துள்ளது. அதில் இரண்டு பேர் முதுகலை மற்றும் மூன்று பேர் இளங்கலை பட்டதாரிகள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 825 பேர் படிப்பறிவு இல்லாதவர்களாக இருப்பதாக தெரியவந்துள்ளது. 1,162 பேரில் 419 பேர் தங்களுக்கு பிச்சை எடுப்பது பிடிக்கவில்லை என கூறியுள்ளனர். தாங்கள் மீண்டும் படிக்க விரும்புவதாக 27 பேர் கூறியுள்ளனர்.
பட்டதாரிகள் ஐந்து பேரும் ராம்னிவாஸ் பாக், வால்ட் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கின்றனர். அதில் ஒருவர் வர்த்தகத் துறையில் முதுகலை பட்டமும், மற்றொருவர் கலைத்துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். ஐந்து பேரில் இரண்டு பேர் 50 முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள். மேலும் இருவர் 32 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள். ஒருவர் மட்டும் 65 வயது முதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வேறு நல்ல வேலைவாய்ப்பு கிடைத்தால் அதனை தொடர அவர்கள் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். வேலை தேடி அலைந்து கிடைக்காததால், சாப்பாட்டுக்கு வேறு வழி இல்லாமல் இதனை செய்ததாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தங்களுக்கு எந்த வேலை கொடுத்தாலும் அதனை செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளனர்.
ஜெய்ப்பூரில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதற்காக காவல்துறை சார்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
