"இவ்ளோ பில்டப் தேவையில்லை.. வேணும்னா வெளில போங்க" - நயினாருக்கு பதில் கொடுத்த சபாநாயகர் அப்பாவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நீட் தேர்வு விலக்கு குறித்தான மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் நோக்கத்துடன் இன்று சட்ட சபை சிறப்புக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இன்று காலை 10 மணிக்குத் துவங்கிய இந்த கூட்டத்திலிருந்து தமிழக பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

3-வது தடவையும் ஆப்பிள் நிறுவனத்துக்கு அபராதம்..அப்படியென்ன தான் சிக்கல்?
ஏகே ராஜன் குழு
ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் குழுவை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு அமைத்தது. நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் 33 நாட்களில் ஆய்வை முடித்து கடந்த ஜூலை மாதத்தில் தங்களது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்பித்தனர்.
இதனையடுத்து, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிப்பது தொடர்பாக கடந்த ஆண்டு செப்.13-ம் தேதி சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.
திருப்பி அனுப்பிய ஆளுநர்
இந்த சட்ட முன்வடிவு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், 142 நாட்களுக்குப்பின் கடந்த 1-ம் தேதி பேரவைத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பியனுப்பியதுடன், சட்டமுன்வடிவை மறு பரிசீலனை செய்யும்படியும் தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
இதனிடையே, இன்று நீட் தேர்வு விலக்கு குறித்தான மசோதா குறித்து விவாதிக்க சட்ட சபை கூடியது. சபையில் குறுக்கிட்டு பேசிய தமிழக பாஜக-வின் முக்கியத் தலைவரும் சட்ட மன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் "ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையை அவமானப்படுத்தும் வகையில் கவர்னர் கருத்து தெரிவிக்கவில்லை" என்றார்.
இவ்ளோ பில்டப் வேண்டாம்
மேலும், தொடர்ந்து குறுக்கிட்டு பேசிய நயினார் நாகேந்திரனை நோக்கி சபாநாயகர் அப்பாவு “வெளியே போறதுக்கு இவ்ளோ பில்டப் வேண்டாம்; போக நினைத்தால் போய்விடுங்கள்” எனக் கூறினார். இதனையடுத்து பாஜக சட்ட மன்ற உறுப்பினர்கள் அவையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன்,"அதிமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் மாணவர்கள் தற்போது பயனடைந்து வருகின்றனர். அரசியல் கண்துடைப்புக்காகவே இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கும் மாணவர்களுக்கும் எந்த நன்மையும் இல்லை.திமுக அரசு அரசியல் லாபத்திற்காக இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது இது ஏற்புடையது அல்ல என்று கூறிய பாஜக இதனை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளது" என்றார்.

மற்ற செய்திகள்
