“பொறியியல் மற்றும் கலைக் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து!!”.. “எந்தெந்த வருட மாணவர்களுக்கு?”.. தமிழக முதல்வர் அறிவிப்பு.. முழு விபரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கல்லூரி பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு முறைகளில் முக்கியமான நடவடிக்கையாக ஊரடங்கினை உலகநாடுகள் அறிவித்து வந்தன. அந்த வகையில், தமிழ்நாட்டிலும் அடுத்தடுத்து லாக்டவுன் நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டும் நீட்டிக்கப்பட்டும் வந்தது.
இதனால் பள்ளி, கல்லூரி தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. இதனிடையே படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், முதலாம், இரண்டாம் ஆண்டு கலை, அறிவியல் இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, கல்லூரி பருவத்தேர்வுகளில் இருந்து விலக்கு அளித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், 2 ஆம் ஆண்டு, 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வும், முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மற்ற செய்திகள்
