VIDEO: அப்டியே 'குடிச்சிருங்க' கண்ணுகளா... கொரோனா 'எட்டிக்கூட' பார்க்காது... வைரலாகும் 'வீடியோ'வால் 'அதிர்ந்து' போன பொதுமக்கள் !
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பரவ ஆரம்பித்த கட்டத்தில் அதற்கு எதிராக போலியான தகவல்களும் கொடிகட்டி பறந்தன. மது குடித்தால் கொரோனா வராது, கள்ளச்சாராயம் சிறந்த மருந்து என்பது போல வெளியான தகவல்களால் ஆங்காங்கே மக்கள் மடிய ஆரம்பித்தனர். இதையடுத்து அரசு பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தி போலி செய்திகளை கட்டுப்படுத்தியது.
இந்த நிலையில் சிறுவர்கள் மது அருந்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலம் மல்கன்கிரி மாவட்டத்தை சேர்ந்த பர்சன்பலி கிராமத்தில், கொரோனா பாதிக்காமல் இருப்பதற்காக சலப்பா என்னும் மரத்திலிருந்து எடுக்கப்பட்ட மதுபானத்தை சிறுவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
Despite relentless efforts to spread awareness about #COVID19, superstitions about the virus still rule interior pockets in #Odisha. An incident from Malkangiri where children were seen consuming country-made 'salap liquor' to prevent SARS-nCoV infection is a testimony to it. pic.twitter.com/qAsRVRvLkm
— OTV (@otvnews) July 21, 2020
சிறுவர்கள் வரிசையாக அமர்ந்து மது அருந்த பெரியவர்கள் இதை உற்சாகப்படுத்துவது போல அந்த வீடியோ அமைந்து உள்ளது. இதைப்பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து கண்டனங்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.