'இது காலத்துக்கும் தமிழரின் பெருமையை சொல்லும்'... 'கீழடி அருங்காட்சியகம்'... அடிக்கல் நாட்டிய முதல்வர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கீழடியில் ரூ.12.25 கோடியில் அமைக்கப்படவுள்ள அருங்காட்சியகத்தைக் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

கீழடியில் நடைபெற்ற அகழாய்வு பணிகள் தொன்மையான தமிழர்களின் பெருமையை இந்த உலகிற்கு எடுத்துக் காட்டியது. அதில் தமிழ் நாகரிகத்தைச் சேர்ந்த பல தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் மிகமுக்கியமாக வடிகால் அமைப்புகள், சுடுமண் குழாய்கள், தமிழ் எழுத்துகள் பொறித்த பானைகள், எழுத்தாணிகள், சுடுமண் வார்ப்பு, பானை ஓடுகள், விளையாட்டுப் பொருட்கள், காதணிகள், தங்கம், உலோகப் பொருட்கள் என 2,600 ஆண்டுகள் புதைந்து கிடந்த ஆயிரக் கணக்கான பொருட்கள் கண்டறியப்பட்டன.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலையடுத்து மார்ச்23 ஆம் தேதியுடன் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து, கடந்த 20 ஆம் தேதி முதல் மீண்டும் 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கியுள்ளன. இதனிடையே தமிழர்களின் பெருமையை மேலும் பறைசாற்றும் வகையில், சுமார் 2 ஏக்கர் பரப்பளவில், 12.25 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கீழடியில் அமையவுள்ள அருங்காட்சியகத்துக்கு, தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி வாயிலாக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். உலகத்தரத்தில் இந்த அருங்காட்சியகம் அமைய இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.
தொல்லியல் துறை மூலம் சிவகங்கை - கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்த கீழடி அருகிலுள்ள கொந்தகை கிராமத்தில் 0.81 ஹெக்டேரில் ரூ.12.21 கோடியில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகத்திற்கு இன்று (20.7.2020) அடிக்கல் நாட்டினேன். pic.twitter.com/k8hLVf3vVE
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 20, 2020

மற்ற செய்திகள்
